Saturday, August 3, 2019

பொறியியல் மாணவர்களுக்கான புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி: கருத்துருக்களை வரவேற்றுள்ளது ஏஐசிடிஇ


நாடு முழுவதும் உள்ள இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பொறியியல் பட்டப்படிப்பு மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்று கருத்துருக்களை அனுப்பலாம் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்புக்கான மையமாக இந்தியாவை உருவாக்கும் நோக்கிலும், புதிதாக எதையாவது உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பொறியியல் மாணவர்களுக்கான இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

2019-ஆம் ஆண்டுக்கான இந்தப் போட்டியை மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையும் (டிஎஸ்டி) டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன.

இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படும் கருத்துருக்களுக்கு செயல்வடிவம் கொடுக்க டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப உதவியையும், பெங்களூரு ஐஐஎம் வழிகாட்டுதலையும், மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை ரூ. 4.94 கோடி நிதியுதவியையும் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் கருத்துருக்களை http://innovate.mygov.in/iide2019 என்ற வலைதளம் மூலம் அனுப்பலாம். கடந்த 2018-ஆம் ஆண்டு நாடு முழுவதும் 1,760 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 26,511 மாணவ, மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்று 10,146 கருத்துருக்களை அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

APPLY  LINK

No comments:

Post a Comment