Tuesday, August 14, 2018

மாணவர்கள் குறைகள், புகார்களைக் கூற தொலைபேசி எண் அறிமுகம

தொடர்புடைய படம்

மாணவ, மாணவிகள் தங்களது குறைகள், புகார்களைக் கூற கல்வித் துறை சார்பில் 14417 என்ற புதிய எண் ஆகஸ்ட் 15 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு முதல் 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, மிதிவண்டி ஆகியன இன்னும் ஒரே மாதத்தில் வழங்கப்படும். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதத்துக்குள் ஸ்மார்ட் கிளாஸ் துவங்கப்படும். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மடிக்கணினி வழங்கப்படுவதுடன், வகுப்பறைகளில் கணினி, இணையதள வசதியும் செய்து தரப்படும். இதற்கென ரூ. 490 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.

32 மாவட்டங்களிலும் டிஜிட்டல் நூலகம், ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைக்கப்படும். மாணவ, மாணவிகள் தங்களது குறைகள், புகார்களைக் கூற கல்வித் துறை சார்பில், 14417 என்ற புதிய எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த எண் மூலம் மாணவ, மாணவிகள் புகார் தெரிவிக்கலாம். தொடர்ந்து, இதன் மீது விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆகஸ்ட் 15 முதல் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவிலேயே முதன்முதலாக இத்திட்டம் தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகளுக்கு, நவம்பர் மாதத்தில் அடிக்கல் நாட்டப்படும் என்றார்.

No comments:

Post a Comment