Tuesday, August 14, 2018

ரயில்வே இன்ஜினியரிங் படிப்பு விண்ணப்பப் பதிவு நடந்து வருகிறது.

ரயில்வே இன்ஜினியரிங் படிப்பு க்கான பட முடிவு

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் டில்லியில் இயங்கி வரும் ‘தி இன்ஸ்டிடியூஷன் ஆப் பர்மனெண்ட் வே இன்ஜினியர்ஸ்’ கல்வி நிறுவனத்தில் ரயில்வே இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமா படிப்பிற்கான விண்ணப்பப் பதிவு நடந்துவருகிறது.

படிப்பு: டிப்ளமா இன் ரயில்வே இன்ஜினியரிங் (ஓர் ஆண்டு)

தகுதி: ரயில்வே துறையில் பணிபுரிபவர் என்றால் குறைந்தது 3 ஆண்டுகள் ரயில்வே அனுபவத்துடன் கணிதம் அல்லது அறிவியல் சார்ந்த பிரிவில் பள்ளிப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். ரயில்வே துறையில் பணிபுரியாத நபர் என்றால், அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமா பட்டம் பெற்றவராக இருப்பது அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பத்தை ஐ.பி.டபுள்யூ.இ., கல்வி நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும் அல்லது நேரடியாகக் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

அங்கீகாரம் மற்றும் சலுகைகள்: ரயில்வேயில் குருப் - சி பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த டிப்ளமா பட்டம், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு சமயங்களில் கூடுதல் தகுதியாக கருதப்பட்டு பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஆகஸ்ட் 31

விபரங்களுக்கு: www.ipweindia.com

No comments:

Post a Comment