Saturday, September 1, 2018

கூகுள் நடத்தும் டூடுல் போட்டி

கூகுள் நடத்தும் டூடுல் போட்டி க்கான பட முடிவு

இந்தியாவில் படிக்கும் பள்ளி மாணவர்களின் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம், வித்தியாசமான உதவித்தொகை போட்டி ஒன்றை நடத்துகிறது!

டூடுல் 4 கூகுள்
படைப்பாற்றலும், வரைதலில் ஈடுபாடும் கொண்டுள்ள இந்திய மாணவர்களுக்காகக் கூகுள் நடத்தும் ஒரு ஸ்காலர்ஷிப் போட்டி தான், ‘டூடுல் 4 கூகுள்’. இப்போட்டில் வெற்றி பெறும் மாணவர்களின் டூடுல் வரைபடம் தீதீதீ.ஞ்ணிணிஞ்டூஞு.ஞிணி.டிண முதற்பக்கத்தில் ஒரு நாள் முழுக்க காட்சி படுத்தப்படுவதோடு அவர்களது உயர்படிப்பிற்கு தேவையான உதவித்தொகையும் வழங்கப்படவுள்ளது.

தகுதி
இந்தியாவைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இந்த போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை
மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு, எதைப் பயன்படுத்தி வேண்டுமானாலும் தங்களது டூடுளை உருவாக்கலாம் அல்லது நேரடியாக கூகுள் பக்கத்திலும் டூடுலை வரையலாம். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இந்த போட்டிக்காக பிரத்யேகமாக உள்ள கூகுளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தங்களது விண்ணப்பத்தையும், படைப்பையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மதிப்பீட்டு முறை
மாணவரின் கலைத் திறன், படைப்பாற்றல், தீம் கம்யூனிகேஷன் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்களது படைப்பு மதிப்பிடப்படும். இவற்றின் அடிப்படையில், ‘நேஷனல் பைனலிஸ்ட்’, ‘குரூப் வின்னர்ஸ்’ மற்றும் ‘நேஷனல் வின்னர்’ என தனித்தனியே மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

பரிசு மற்றும் உதவித்தொகை
வெற்றி பெறும் மாணவரின் டூடுல், நவம்பர் 14ம் தேதி கூகுள் சர்ச் இன்ஜினின் முதல் பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும். மேலும், அந்த மாணவரின் உயர் கல்விக்காக இந்திய ரூபாய் மதிப்பில் 5 லட்சமும், அவர் படிக்கும் பள்ளிக்குத் தொழில்நுட்ப தொகுப்பிற்காக 2 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். அது மட்டுமின்றி சான்றிதழ், கோப்பை மற்றும் இந்தியாவில் இயங்கும் கூகுள் நிர்வாக அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிடும் வாய்ப்பும் கிடைக்கும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 6

விபரங்களுக்கு: https://doodles.google.co.in/d4g/

No comments:

Post a Comment