Thursday, July 12, 2018

TNPSC - Forest Apprentice - Examination Date changed


Image result for tnpsc forest


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 04.07.2018 அன்று வனப் பயிற்சியாளர் (Forest Apprentice) என்ற பதவிக்கு அறிவிக்கை (எண்: 12/2018) வெளியிட்டிருந்தது. அதற்கான தேர்வுகள் 23.09.2018 முதல் 30.09.2018 வரை நடத்துவதாக அறிவித்திருந்தது. மேற்கண்ட நாட்கள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) மற்றும் பிற தேர்வு நடத்தும் அமைப்புகள் நடத்தும் தேர்வு நாட்களை கருத்தில் கொண்டு கவனமுடன் முடிவு செய்யப்பட்டன இந்நிலையில், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் 28.09.2018 முதல் ஐந்து நாட்கள் குடிமைப்பணிகளுக்கான முதன்மைத்தேர்வு நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில் விண்ணப்பதாரர்களின் நலன் கருதி, வனப் பயிற்சியாளர் (Forest Apprentice) பதவிக்கான தேர்வினை, 06.10.2018 முதல் 13.10.2018 வரை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்து அதற்கான அறிவிக்கையை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment