Monday, July 9, 2018

தேசிய ஹோமியோபதி கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

Image result for தேசிய ஹோமியோபதி கல்வி நிறுவனத்தில்


மத்திய அரசின் ஆயூஷ் அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவில் இயங்கும் தேசிய ஹோமியோபதி கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: பேச்சுலர் ஆப் ஹோமியோபதி மெடிசன் அண்ட் சர்ஜரி (பி.எச்.எம்.எஸ்.,) - 5.6 ஆண்டுகள்

தகுதிகள்: ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: ‘நீட்’ தகுதி தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் சேர்க்கை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை விரைவு தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 31 (மாலை 4 மணி வரை)

விபரங்களுக்கு: www.nih.nic.in

No comments:

Post a Comment