Monday, July 9, 2018

இதழியல் துறை முதுகலை பட்டதாரிகளுக்கு பிரசார் பாரதியில் வேலை!


மத்திய அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான இந்திய வானொலியின் பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஓப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Monitoring-cum-Content Assistants
காலியிடங்கள்: 10 
தகுதி: இதழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் மற்றும் முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
சம்பளம்: மாதம் ரூ. 25,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பத்தார்கள் தங்களது சுய விபரத்தை ஏ4 வெள்ளத்தாளில் தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Assistant Director (Programmes),
Room No.403, New Broadcasting House,
External Services Division,
All India Radio,
Parliament Street,
New Delhi - 110001

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2018

விவரங்கள் அறிய Click Here

No comments:

Post a Comment