Monday, July 2, 2018

இளைஞர் மேம்பாட்டில் டிப்ளமா படிப்பு

Image result for Rajiv Gandhi National Institute of Youth Development |

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ‘ராஜிவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் யூத் டெவலப்மெண்ட்’ கல்வி நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்பு: 

இளைஞர் மேம்பாட்டு முதுநிலை டிப்ளமா படிப்பு (போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் யூத் டெவலப்மெண்ட்)

தகுதி: 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதோ ஒரு பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கால அளவு: 

குறைந்தது ஒரு ஆண்டு. அதற்குள் இந்த டிப்ளமா படிப்பை முடிக்க இயலாதோர் அதிகபட்சம் இரண்டு ஆண்டிற்குள் முடித்திட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

ஆன்லைன் அல்லது அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க விரும்புவோர் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். அஞ்சல் வழி விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கல்லூரி நிர்வாக முகவரிக்கு தங்களது விண்ணப்பத்தை அனுப்பலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 31

விபரங்களுக்கு: www.rgniyd.gov.in

No comments:

Post a Comment