Monday, July 2, 2018

தேசிய நாடக பள்ளியில் சேர்க்கை விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 10

Related image

இந்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் பெங்களூருவில் இயங்கி வரும் தேசிய நாடக பள்ளியில், ஓர் ஆண்டு நடிப்பு பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்பு: 

நடிப்பு பயிற்சி (இண்டன்சிவ் கோர்ஸ் இன் ஆக்டிங்)

தகுதி: 

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். பழங்குடி, நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய நாடக கலையில் அசாதாரண திறன் பெற்ற குடும்பத்தை சார்ந்தவர்கள் பட்டப்படிப்பு பெறவில்லை என்றாலும் வாய்ப்பு வழங்கப்படும். நாடக கலை குறித்த அடிப்படை தெளிவு பெற்றிருப்பது அவசியம்.

வயது வரம்பு:

21 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

மொத்த இடங்கள்: 20

சேர்க்கை முறை: 

விண்ணப்பத்தை, ‘நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா’ கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைக் கல்வி நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். இரண்டு சுற்று தேர்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

உதவித்தொகை: 

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.4,500 உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 10

தேர்வு நாள்: ஜூலை 17 மற்றும் 18

தேர்வு பயிற்சிப் பட்டறை: ஜூலை 25, 26 மற்றும் 27

விபரங்களுக்கு: www.nsd.gov.in

No comments:

Post a Comment