Wednesday, June 20, 2018

தமிழில் சட்டப் பயிற்சி மனுபாத்ரா நிறுவனம் அறிமுகம்

Image result for சட்டப் பயிற்சி

தமிழில் சட்டப்பயிற்சி சேவைகளை மனுபாத்ரா பகுப்பாய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்காக lawskills.com என்கிற இணையதளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக மனுபாத்ரா இன்பர்மேஷன் நிறுவனத்தின் இயக்குநர் தீபக் கபூர் கூறுகையில், இந்தியாவில் சட்டக் கல்வி சிறப்பான வகையில் இருந்தாலும், சட்டக் கல்வி முடிப்பவர் கள் நீதிமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காக வழக்கறிஞர்களிடத்தில் தனியாக பயிற்சி பெறுகின்றனர். இதனால் அவர்கள் சொந்தமாக தொழி லைத் தொடங்க சில ஆண்டுகள் கூடுதலாக செலவாகிறது. இந்த அனுபவப் பயிற்சி காலகட்டத்தை தவிர்க்கும் விதமாக லா ஸ்கில்ஸ் இணையதள பயிற்சி இருக்கும். அதுபோல கார்ப்பரேட்டுகள் ஈடுபடும் ஒப்பந்தங்கள், அவர்களுக்கான சட்ட நடைமுறைகளையும், மற்றும் வழக்கு நடைமுறைகளை தெரிந்து கொள்ளலாம். சட்ட மாணவர்கள் அல்லாதவர்களும் இந்திய சட்ட நடைமுறைகள் குறித்த கல்வி பெற இந்த இணைய தளம் உதவும். தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு தமிழில் சட்ட விவரங்களை அளிக்கிறோம். பயிற்சிக்கான சராசரி கட்டணம் ரூ.4,000 என்கிற அளவிலேயே நிர்ணயித்துள்ளோம். சட்டக் கல்லூரிகள் அளவில் இந்த இணைய தளத்தை கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம். தற்போது தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் சட்ட விவரங்களை அளிக்கிறோம் வரும் ஆண்டுக்குள் 10 மொழிகளில் அளிக்க உள்ளோம். தினசரி வழக்கு விவரங்கள் வரை இணையதளத்தில் உடனடியாக பார்க்க முடியும் என்றார். சட்டத் தகவல்கள் தேடல், பகுபாய்வு துறையில் உள்ள மனுபாத்ரா இதன் மூலம் சட்டக் கல்வி பயிற்சியிலும் கால்பதித்துள்ளது.

No comments:

Post a Comment