Wednesday, June 20, 2018

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு

Image result for விருது

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணியாற்றியவரகள், பணிபுரியும் நிறுவனங்களை தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, அவர்களுக்கு முதல்வரால் விருது வழங்கப்படுகிறது. சுதந்திர தினத்தன்று இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியர், சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், சிறந்த சமூக பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய வகைகளில் விருது வழங்கப்படுகிறது.

இதில், மாவட்ட ஆட்சியருக்கு 10 கிராம் எடை தங்கப் பதக்கம், ரூ.25 ஆயிரம் ரொக்கமும், சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு 10 கிராம் எடை தங்கப்பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும். மற்றவர்களுக்கு 10 கிராம் எடை கொண்ட தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், சென்னை, காமராஜர் சாலையில் உள்ள, மாற்றுத்திறனாளி களுக்கான மாநில ஆணையர் அலுவலகம் அல்லது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் இருந்து விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சான்றிதழ்களுடன் ஜூன் 27-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, விருதுகள் சுதந்திர தினத்தன்று முதல்வரால் வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Whatsapp Alert

No comments:

Post a Comment