Wednesday, June 20, 2018

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய டிப்ளமோ பயிற்சி

Image result for டிப்ளமோ பயிற்சி

ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனமான "டெக்பீ " என்கிற 15 மாத கால டிப்ளமோ பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

"டெக்பீ" திட்டம், ஆரம்பக் கால வேலை மற்றும் உயர்கல்விக்கான திட்டமாகும். இந்த ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காகவே பிரத்தியேகமாக ஊக்கத்தொகையுடன் கூடிய இந்த டிப்ளமோ பயிற்சி திட்டத்தை ஹச்.சி.எல் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள திறமைமிக்க மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்த பயிற்சி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இந்த "டெக்பீ " திட்டத்தில் சேர்வதற்கு அடிப்படைத் தகுதியாக மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் கணிதத்துடன் சேர்த்து 85 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இந்த பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.10000 வழங்கப்படும். இந்த டிப்ளமா பயிற்சிக்கான கட்டணம் ரூ.2இலட்சம், ஆனால் இந்த கட்டணத்தை முதலில் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சி முடித்து வேலைக்குச் சேர்ந்தபின்பு அதாவது 3வது ஆண்டு முதல் செலுத்தினால் போதும். கல்விக் கடன் அல்லது இ.எம்.ஐ மூலமாக செலுத்தும் சலுகையையும் அளிக்கிறது.

மேலும் பயிற்சி முடிவில் நடத்தப்படும் தேர்வில்90 சதவிகிதம் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வசூலிக்கப்படாது. 85 முதல் 90 சதவீத மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் சேர பிரத்தியேக ஆன்லைன் மற்றும் நேர்முகத் தேர்வுகள் மாணவர்களுக்காக நடத்தப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்குச் சென்னை எஸ்.எஸ்.என் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல், அப்ளிகேஷன் டெவெலப்மென்ட், சாப்ட்வேர் / புராடக்ட் டெஸ்டிங் மற்றும் அப்ப்ளிகேஷன் சப்போர்ட் ஆகிய துறைகளில் 15 மாத கால பயிற்சி அளிக்கப்படும் என்று ஹெச்.சி.எல். நிறுவனத்தின் முதன்மை துணை தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் தெரிவித்தார்.

மேலும் விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலவசஎண் 1800-200-1117


Whatsapp Alert

No comments:

Post a Comment