Saturday, May 12, 2018

தமிழக சுற்றுலாத்துறையில் வேலை

Related image

தமிழக சுற்றுலாத்துறையில் காலியாக உள்ள 13 தோட்டக்காரர் மற்றும் 10 காவலர் பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: தோட்டக்காரர்
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

காலியாக உள்ள சுற்றுலா அலுவலகம் விவரம்: 
1. சுற்றுலா அலுவலகம் பூம்புகார் - 7 
2. சுற்றுலா அலுவலகம் தூத்துக்குடி - 06

தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். தோடட்டங்கள் பராமரிப்பதில் ஒரு ஆண்டிற்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (உரிய அனுபவச் சான்றி நகல் இணைக்கப்பட வேண்டும்).

பணி: காவலர்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

காலியாக உள்ள சுற்றுலா அலுவலகம் விவரம்: 
1. சுற்றுலா அலுவலகம் பூம்புகார் - 5
2. சுற்றுலா அலுவலகம் தூத்துக்குடி - 03
3. சுற்றுலா அலுவலகம் மதுரை - 01
4. சுற்றுலா அலுவலகம் தஞ்சாவூர் - 01

தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் தகுதி இருத்தல் வேண்டும். கண்பார்வை தெளிவாக உள்ளது என சான்று(அரசு மருத்துவரிடரிமிருந்து பெற்று சமர்பிக்கப்பட வேண்டும்) முன்னாள் ராணுவ வீரர் அல்லது அரசு சார்ந்த நிறுவனத்தில் காவலராக இரண்டு ஆண்டு பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (உரிய அனுபவச்சான்று நகல் இணைக்கப்பட வேண்டும்).

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும். பொதுப்பிரிவினர் 30க்குள்ளும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32க்குள்ளும், ஆதி திராவிடர் 35க்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளோர் தங்களது விண்ணப்பித்தினை கீழ்காணும் மாதிரி விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு வெள்ளைத்தாளில் தெளிவாக குறிப்பிட்டு எழுதி அனுப்ப வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே ஒரு விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும். கல்விச் சான்று நகல், சாதிச் சான்று நகல், அனுபவச் சான்று நகல், முகவரி சான்று மற்றும் பிறப்புச் சான்று நகல் ஆகியவற்றின் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
சுற்றுலா ஆணையர், சுற்றுலா ஆணையரகம், தமிழ்நாடு சுற்றுலா வளாகம், 
எண்.2, வாலாஜா சாலை, 
சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.05.2018

முழுமையான விவரங்கள் அறிய Click Here

No comments:

Post a Comment