Saturday, May 26, 2018

என்ஜினீயரிங் விண்ணப்ப பதிவு ஜூன்2-ந்தேதி வரை நீட்டிப்பு

Image result for என்ஜினீயரிங் விண்ணப்ப

என்ஜினீயரிங் விண்ணப்ப பதிவு ஜூன்2-ந்தேதி வரை நீட்டிப்பு அதிகாரி அறிவிப்பு என்ஜினீயரிங் படிப்பில் சேர அண்ணாபல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்காக விண்ணப்பம் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 30-ந்தேதி என்று இருந்தது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையதள சேவை இல்லாத காரணத்தால் என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரிய ராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment