Friday, April 27, 2018

தேசிய பார்மசூடிகல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பு

Image result for niperahm

நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும், தேசிய பார்மசூடிகல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

படிப்புகள்: எம்.எஸ்., - எம்.பார்ம்., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - பிஎச்.டி.,

தகுதி: எம்.எஸ்., - எம்.பார்ம்., - எம்.டெக் ஆகிய முதுநிலை படிப்புகளுக்கு, துறை சார்ந்த இளநிலை பட்டமும், பிஎச்.டி., படிப்பிற்கு முதுநிலை பட்டமும் தேவை.

சேர்க்கை முறை: என்.ஐ.பி.இ.ஆர்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, சென்னை உட்பட மாநிலங்களின் முக்கிய நகரங்களில் கணினி வழி தேர்வு நடைபெறும். அதில் 200 மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1/4 மதிப்பெண்கள் குறைக்கப்படும். மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடை நாள்: மே 15

தேர்வு நாள்: ஜூன் 10

விபரங்களுக்கு: Click Here

No comments:

Post a Comment