Saturday, May 25, 2019

தமிழ்ச் சுவடியியல் பயிற்சி!!



நண்பர்களே வணக்கம், தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ்த் துறையில் நடைபெறும் தமிழ்ச் சுவடியியல் பயிலரங்கில் கலந்து கொண்டு பயிற்சி பெற விழைவோர் விண்ணப்பம் செய்யலாம், ( பயிற்சி நாள் 15-06-19 முதல் 05-0719 வரை, நேரம் காலை 10-30 முதல் மாலை 05-00 மணி வரை, )


\

ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி வேலை: பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி வேலை க்கான பட முடிவு

இந்திய ராணுவத்தில் 42-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (டி.இ.எஸ்-42, ஜன 2020) பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு பிளஸ் டூ முடித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக்கின்றன. இதில் நுழைவுத் திட்டத்தின்படி சேர்பவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். 

மொத்த காலியிடங்கள்: 90 

பயிற்சி: 42-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (டி.இ.எஸ்-42, ஜன 2020)

தகுதி: இயற்பியல், வேதியியல், கணதவியல் பாடங்கள் கொண்ட பிரிவில் 70 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ (10+2 முறையில் படித்து) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 01.07.2000 மற்றும் 01.7.2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்களே.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்.எஸ்.பி நடத்தும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வானது முதல் நிலை, இரண்டாம் நிலை என இருநிலைகளில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட உடல் தகுதி மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.06.2019 

விவரங்கள் அறிய Click Here


சென்னை உயர்நீதிமன்றத்தில் தோட்டக்காரர் வேலை



சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள 24 தோட்டக்காரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூன் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: தோட்டக்காரர் (Gardener) 

காலியிடங்கள்: 24

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பிசி, எம்பிசி, டிசி, பிசிஎம் பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2019

விவரங்கள் அறிய Click Here

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை



சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள 30 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூன் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: ஓட்டுநர்

காலியிடங்கள்: 30

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பிசி, எம்பிசி, டிசி, பிசிஎம் பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2019

விவரங்கள் அறிய Click Here


Friday, May 24, 2019

எல்ஐசியில் 8581 காலியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரி இளைஞர்களுக்கான அறிவிப்பு.


மத்திய அரசின் ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள 8,581 Apprentice Development Officer (ADO) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தென்னக எல்ஐசி அலுவலத்திற்கு 1,257 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 8,581

பணி: Apprentice Development Officer (ADO) 

மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Central Zonal Office, Bhopal - 525
2. Eastern Zonal Office, Kolkata - 922
3. East Central Zonal Office, Patna - 701
4. South Central Zonal Office, Hyderabad - 1251
5. Northern Zonal Office, New Delhi - 1130 
6. North Central Zonal Office, Kanpur - 1042 
7. Southern Zonal Office, Chennai - 1257 
8. Western Zonal Office, Mumbai - 1753

தகுதி: எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: பயிற்சி காலம் உதவித்தொகையாக மாதம் ரூ34,503 வழங்கப்படும். பின்னர் Probationary Development Officer -ஆக நியமனம் செய்யப்பட்டு மாதம் ரூ.21,865 - 55,075 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 02.05.1989 - 01.05.1998க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் தகவல் கட்டணமாக ரூ.50 + சேவை கட்டணம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.licindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.06.2019

விவரங்கள் அறிய Click Here


மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப படிப்பில் சேர ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப படிப்பி க்கான பட முடிவு

மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சிப்பட் (CIPET) எனப்படும் மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை கிண்டியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தக் கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேர JEE எனப்படும் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இங்கு வழங்கப்படும் டிப்ளமோ இன் பிளாஸ்டிக் மோல்ட் டெக்னாலஜி (DPMT) மற்றும் டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெக்னாலஜி (DPcT) எனப்படும் 3 ஆண்டு கால அளவிலான படிப்புகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பிளாஸ்டிக் பிராசசிங் டெக்னாலஜி (PGD-PT) எனப்படும் ஒன்றரை ஆண்டு கால அளவிலான படிப்புக்கு வேதியியலை ஒரு பாடமாக கொண்ட மூன்றாண்டு இளநிலை அறிவியல் படிப்பை (B.SC) முடித்திருக்க வேண்டும். 

இந்தத் தேர்வுக்கான விண்ணப்பித்தினை என்ற இணையதளத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். நுழைவுத் தேர்வும் ஜூலை மாதம் 7-ஆம் தேதி ஆன்லைனில் மட்டுமே நடைபெற உள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 30-ஆம் தேதி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு: சென்னைப் பல்கலை. அறிவிப்பு


தொடர்புடைய படம்

தேசிய தேர்வுகள் முகமை நடத்த உள்ள நெட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடர்பான அறிவிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

ஜூன் மாதம் 7 -ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் பயிற்சி வகுப்பில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவு மாணவர்களும் சிறுபான்மையின மாணவர்களும் பங்கேற்க முடியும். இதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தில் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 30 கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு சென்னைப் பல்கலைக்கழக மாணவர் ஆலோசனை மைய இயக்குநரை நேரில் சந்தித்து தெரிந்துகொள்ளலாம் அல்லது 044 - 25399518 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.நெட் தேர்வானது கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர் பணிக்கானத் தகுதித் தேர்வாகும். யுஜிசி-யின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் இந்தத் தேர்வை எழுதவேண்டும்.

Saturday, May 11, 2019

நெய்வேலியில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்!

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் க்கான பட முடிவு

படிப்புக்கு ஏற்ற வேலை தேடும் பட்டதாரிகளையும், கிடைத்த வேலைக்கு போகும் பட்டதாரிகளையும் நாம் நிறய பேரை பார்த்திருப்போம். ஆனால், 10ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும், முதுநிலைப் பட்டம் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய நினைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ராணுவத்தில் சேர ஓர் அரிய வாய்ப்பு. 

பாதுகாப்புத் துறை ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளபடி கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள பாரதி விளையாட்டு அரங்கில் இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் வருகிற ஜூன் மாதம் 7-ம் தேதியிலிருந்து 17-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த முகாமில் சென்னை, கடலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுடன், புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்ளலாம்.

இதில் தொழில்நுட்பம், விமான தொழில்நுட்பம், வெடிகுண்டு பரிசோதகர், நர்சிங் உதவியாளர், பொதுப்பணி, எழுத்தர், ஸ்டோர் கீப்பர் டெக்னீசியன், டிரேட்ஸ்மென் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8,10,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. சில பணிகளுக்கு பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதள பதிவு மே 18-ம் தேதி வரை பதிவு செய்யலாம். விண்ணப்பதாரர்கள் மே மாதம் 21-ம் தேதி மேற்கண்ட இணையதளத்திலிருந்து தங்களுடைய அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதேபோன்று ஆட்சேர்ப்பு முகாமிற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்கள் அனுமதி சீட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும். ஆள்சேர்ப்பு செயல்முறை முழுமையாக தானியங்கி மற்றும் வெளிப்படையானது. கடின உழைப்பு, தயாரிப்பு மட்டுமே தகுதியாக தேர்வு செய்வதை உறுதி செய்கிறது. போலி முகவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்பதையும் அந்தச் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இசை, நடன டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பம் வரவேற்பு

இசை, நடன டிப்ளமோ படிப்பு க்கான பட முடிவு

பரதநாட்டியம், கர்னாடக இசை யில் டிப்ளமோ படிக்க, பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்க லாம் என்று கலாஷேத்ரா கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை திருவான்மியூரில் இயங்கி வருகிறது கலாஷேத்ரா அறக்கட்டளை கல்வி நிறுவனம். இது மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இங்கு பரதநாட்டியம், கர்னாடக இசை (வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம்) மற்றும் விஷுவல் ஆர்ட்ஸ் பாடங்களில் 4 ஆண்டு கால முழுநேர டிப்ளமோ படிப்பு கள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்தவர்கள் இதில் சேரலாம். 2019-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. இப்படிப்புகளில் சேர விரும்புவோர் ஆன்லைனில் (www.kalakshetra.in/admissions) மே 31-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும் என்று கலா ஷேத்ரா அறிவித்துள்ளது.

TLX Tech Solutions Off Campus 2019

TLX Tech Solutions க்கான பட முடிவு

Company Name: TLX Tech Solutions

Post Name: Various Posts

Skills required:
Basic knowledge on C, C++
Basic knowledge in SQL (Data Base)
Knowledge in handling data
Good communication skills
Strong attitude
Knowledge in MS Office(Excel)
Versatile

Qualification: B.E/B.Tech (CS & IT), MCA & M.Sc Computer

Experience: Fresher’s (2019 Batch)

Job Location: Coimbatore

Walk in Date: 16th May 2019 Walk in Time: 09.00 AM

College Address and Venue:
Karpagam College of Engineering, Coimbatore

Registration Link: Click Here

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் கம்பியூட்டர் ஆப்ரேட்டர் வேலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.



திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் புதியதாக உருவாகியுள்ள 45 கம்பியூட்டர் ஆப்ரேட்டர் (தற்காலிக பணி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 45

பணி: Computer Operator

தகுதி: Computer Science, Computer Application போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கம்பியூட்டர் அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு ஆணை மற்றும் விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ. 20,600 - 65,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/tirunelveli என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்டு தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி - 627 002

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.05.2019

விவரங்கள் அறிய Click Here

சட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு: 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு மே 16 முதல் விண்ணப்ப விநியோகம்

சட்டப் படிப்புகள் க்கான பட முடிவு

இளநிலை சட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 12 சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த இளநிலை படிப்புகள் மற்றும் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கான மூன்றாண்டு சட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
 
இப்போது 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐந்தாண்டு படிப்புகளைப் பொருத்தவரை பி.ஏ.-எல்.எல்.பி., பி.காம்.-எல்.எல்.பி., பி.பி.ஏ.-எல்.எல்.பி., பிசிஏ-எல்.எல்.பி. ஆகிய நான்கு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் மே 16-ஆம் தேதி முதல் நேரிலும், தபால் மூலமும் விநியோகிக்கப்படும்.  விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000. தபால் மூலம் பெற கூடுதலாக ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 31 கடைசி நாளாகும்.

அதுபோல மூன்றாண்டு எல்.எல்.பி. படிப்புக்கான விண்ணப்பம் ஜூன் 28 முதல் விநியோகிக்கப்பட உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூலை 26 கடைசி நாளாகும்.

கட்டணம் எவ்வளவு: சீர்மிகு சிறப்புப் பள்ளியில் வழங்கப்படும் ஹானர்ஸ் படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1000 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ. 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
12 இணைப்புக் கல்லூரி படிப்புகளில் சேர்க்கை பெறுதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ. 250 ஆகும்.

தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் கூடுதலாக ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தை (www.tndalu.ac.in) பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

Saturday, May 4, 2019

தமிழக அரசில் டிரக்ஸ் இன்ஸ்பெக்டர் பணி

டி.என்.பி.எஸ்.சி. க்கான பட முடிவு

நிறுவனம்: டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு 

வேலை: டிரக்ஸ் இன்ஸ்பெக்டர், ஜூனியர்  அனலிஸ்ட் பணி

காலியிடங்கள்: டிரக்ஸ் இன்ஸ்பெக்டர் பணிக்கு 40 பேர், ஜூனியர் அனலிஸ்ட் பணிக்கு 9 பேர் 

கல்வித் தகுதி: பார்மசி, பார்மசூட்டிகல் கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி மற்றும் குறிப்பிட்ட பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: 30 வயதுக்கு உட்பட்டவர்கள்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

விண்ணபிக்க கடைசித் தேதி: 12.5.2019

மேலதிக தகவல்களுக்கு: http://www.tnpsc.gov.in

வேலூர் மாவட்ட நீதித்துறையில் வேலை

தொடர்புடைய படம்

வேலூர் மாவட்ட நீதித்துறையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் அடிப்படை பணிகளில் காலியாகவுள்ள 15 இரவு காவலர், முழு நேர பணியாளர்(மசால்ஜி) பணியிடங்களை தற்காலிகமாக நியமனம் செய்வதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15

பணி: இரவு காவலர் - 12
பணி: முழு நேர பணியாளர்(மசால்ஜி) - 03

தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து பதிவுத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்ப வேண்டும்.

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் பட்டியல் தகுதித் தேர்வுக்கு இந்நீதிமன்ற districts.ecourts.gov.in/vellore மற்றும் districts.ecourts.gov.in/tn/vellore என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு அழைக்கப்படுவோர் மட்டும் தகுதித் தேர்வில் கலந்துகொள்ளலாம். பின்னர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தலைமை நீதித்துறை நடுவர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வேலூர் - 632 009

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.05.2019

விவரங்கள் அறிய Click Here

கால்நடை மருத்துவ படிப்புக்கு  மே 8 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை 

.tanuvas logo க்கான பட முடிவு

கால்நடை மருத்துவப் படிப்புக்கு வரும் 8-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திரு நெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங் களில் கால்நடை மருத்துவக் கல் லூரிகள் உள்ளன. இந்த கல்லூரி களில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பிவிஎஸ்சி - ஏ.ஹெச்) 360 இடங்கள் உள் ளன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில் நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் மற்றும் ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில் நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது. கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கான 360 இடங்களில் அகில இந்திய ஒதுக் கீட்டுக்கு 54 இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. அதே போல் உணவுத் தொழில்நுட்ப படிப் பில் 40 இடங்களில் 6 இடங்கள் (15 சதவீதம்) இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கு 2019-20-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற இணைய தளங்களில் மே 8-ம் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 10-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக் கலாம். தகுந்த சான்றிதழ்களை ஆன் லைனிலேயே பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். பூர்த்திசெய்யப்பட்ட விண் ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ்களுடன் ஒவ் வொரு படிப்புகளுக்கான விண்ணப்பத்தையும் தனித்தனி யாக வரும் ஜூன் 10-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தலைவர், சேர்க்கைக்குழு (இளநிலை பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால் நடை மருத்துவ அறிவியல் பல் கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை - 600 051 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் தொகுப்பேடு, சேர்க்கைத் தகுதி கள், தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங் களும் இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில்  இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்

Tamil Nadu Agricultural University க்கான பட முடிவு

தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகத்தில் இளநிலை பட் டப்படிப்புகளில் சேர மே 8-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தலைவர் ம.கல்யாணசுந்தரம் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகத்தின் கீழ், தமிழகத் தில் கோவை, மேட்டுப்பாளையம், கிள்ளிகுளம், திருச்சி, ஒரத்த நாடு, திருவண்ணாமலை, புதுக் கோட்டை, பெரியகுளம் ஆகிய இடங்களில் 19 உறுப்புக் கல்லூரி களும், வேலூர், பெரம்பலூர், பொள்ளாச்சி, தேனி, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, கோபி, அரக்கோணம், கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் 27 இணைப்புக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், ஊட்டச்சத்தியல் மற்றும் உணவு முறையியல், பட்டு வளர்ப்பு, பி.டெக். வேளாண்மை பொறியியல், உயிர் தகவலியல் தொழில்நுட்பம் ஆகிய இளநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளின் முதலாம் ஆண்டில் மொத்தம் 3,905 இடங்கள் உள்ளன. இந்த இடங் கள் வரும் 2019-2020-ம் கல்வி ஆண்டில் தகுதியுடைய மாணவர் களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 8-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் http://www.tnau.ac.in/ugadmission.html என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின், விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்த வேண்டும். சிறப்புப் பிரிவு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஜூன் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நேரில் வந்து சான்றிதழ் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஜூன் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்து கொள்ளலாம். 20-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளி யிடப்படும். மேலும் விவரங் களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 0422-6611345, 6611346 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எம்.பில்., பிஎச்.டி. படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவிப்பு

தொடர்புடைய படம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) பி.தியாகராஜன் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு திறந்த பல்கலைக் கழகத்தில் யுஜிசி அனுமதியுடன் முழுநேர, பகுதிநேர எம்.பில்., பிஎச்.டி. படிப்புகள் ரெகுலர் முறை யில் வழங்கப்பட்டு வருகின்றன. எம்.பில். படிப்பில் தமிழ், வரலாறு, புவியியல், மேலாண்மையியல், இயற்பியல், உளவியல், சமூக வியல், மின்னணு ஊடகவியல், கல்வியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் உள்ளன. அத்துடன் பிஎச்.டி. படிப்பில் தமிழ், பண்டைய வரலாறு மற் றும் தொல்லியல், புவியியல், மேலாண்மையியல், இயற்பி யல், வேதியியல், விலங்கியல், கல்வியியல், மின்னணு ஊடகவி யல் ஆகிய பாடப்பிரிவுகளும் உள்ளன. யுஜிசி ஜெஆர்எப் (ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப்) தகுதி பெற்ற வர்கள் யுஜிசி நிதியுதவியுடன் பிஎச்டி-யில் ஆய்வு மேற்கொள்ள லாம். 2019-ம் ஆண்டு ஜூலை பருவ எம்.பில்., பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கு தற்போது விண்ணப் பிக்கலாம். விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கவுரையை பல் கலைக்கழகத்தின் இணையதளத் தில் (www.tnou.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப் பிக்க கடைசி நாள் மே 29-ம் தேதி ஆகும்.

மீன்வளத்துறையில் ஆய்வக உதவியாளர் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


தமிழக அரசின் மீன்வளத்துறையில் ஆய்வக உதவியாளர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Laboratory Assistant - 01

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் துறையில் விலங்கியல், தாவரவியல், வேதியியல் பிரிவில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.06.2019

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இLனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2019

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்... சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

சிமெண்ட் கார்ப்பரேஷன் க்கான பட முடிவு

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 19 அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 19 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager (Production)- 01
பணி: Manager (Mechanical) - 01 
பணி: Dy. Manager (Mechanical) - 02
பணி: Dy. Manager (Electrical) - 01
பணி: Dy. Manager (MM) - 01
பணி: Dy.Manager (Marketing) - 01
பணி: Engineer (Electrical) - 03
பணி: Officer (HR) - 03
பணி: Account Officer (Finance & Accounts) - 03
பணி: Officer (Sales & Marketing) - 03

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள், பண்டக மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், சந்தையியல் மேலாண்மை, மனிவள மேலாண்மை, தொழிலாளர் மேலாண்மை போன்ற பிரிவுகளில் எம்பிஏ முடித்து 2 மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ(நிதி) படிப்புடன் 2 பணி அனுபவம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பக்கலாம். 

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் மாறும்படும். 42 வயதிற்குள் இருப்பவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.cciltd.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Cement Corporation of India limited, Reged.Office: Core-V, Scope Complex, 7-Lodhi Road, New Delhi - 110 003.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.05.2019

விவரங்கள் அறிய Click Here

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: மே 6 முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு க்கான பட முடிவு

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு, வரும் திங்கள்கிழமை (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் அதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாதவர்கள், தேர்ச்சி பெறாதவர்களுக்காக ஜூன் 14 முதல் 22-ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதற்கான விண்ணப்பப் பதிவு வரும் 6-ஆம் தேதி தொடங்கவுள்ளது. மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவோ அல்லது தேர்வு மையங்கள் வாயிலாகவோ ஆன்-லைன் மூலமாக வரும் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம்: ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ரொக்கமாகச் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்திலேயே வெளியிடப்படும். அதனை ஆன்லைன் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கூட விவரங்கள் அனுமதிச் சீட்டில் இடம்பெற்றிருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி நேர பி.இ. சேர்க்கை: மே 6 முதல் விண்ணப்பிக்கலாம்

பகுதி நேர பி.இ. சேர்க்கை க்கான பட முடிவு

பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்க்கை பெற வரும் 6 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மூன்று ஆண்டு பட்டயப் படிப்பு முடித்து, குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாகப் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே இந்த பகுதி நேர பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.


கோவை, சேலம், திருநெல்வேலி, காரைக்குடி, வேலூர், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரிகள், கோவை தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (சிஐடி), கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்தக் கல்லூரிகளில் 2019-20-ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டயப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதோடு, பணிபுரிபவராகவும், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

இதற்கு மே 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூன் 4 கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்து, அதைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணத்துக்கான வரைவோலையுடன் செயலர், பகுதி நேர பி.இ., பி.டெக். சேர்க்கை, கோவை தொழில்நுட்ப கல்லூரி, கோவை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

Wednesday, May 1, 2019

கிளைச் சிறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம


தொடர்புடைய படம்

கிளைச் சிறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காஞ்சிபுரம் மாவட்டம் புழல் மத்திய சிறை-1-இன் கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுராந்தகம் கிளைச் சிறைகள் உள்ளன. இதில், காலியாக உள்ள சமையலர் (ஆண்), செவிலி உதவியாளர், துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி: சமையலர், செவிலி உதவியாளர் பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல் பணியில் 2 ஆண்டுகளுக்கும் குறையாத அனுபவம் இருக்க வேண்டும். துப்புரவுப் பணியிடத்துக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு அதிகபட்சமாக 35, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32, பொதுப் பிரிவினருக்கு (ஓ.சி.) 30 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். சமையலர், செவிலி உதவியாளர் பணியிடத்துக்கு ரூ.15,900-50,400 என்ற ஊதிய விகித அடிப்படையிலும், துப்புரவுப் பணியிடத்துக்கு ரூ.15,700-50,000 என்ற அடிப்படையிலும் ஊதியம் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தகுதியுடைய விண்ணப்பங்களை, சிறைக் கண்காணிப்பாளர், மத்திய சிறை-1 (தண்டனை), புழல், சென்னை-66 என்ற முகவரிக்கு மே 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044-26590615 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


அரசு பாலிடெக்னிக் கல்லூரி க்கான பட முடிவு

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஏப்.29-ஆம் தேதி முதல் மே 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் முதலாமாண்டு பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீடு, பகுதி நேரப் படிப்புச் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் அந்தந்தக் கல்லூரிகளில் ஏப்.29 தொடங்கி வரும் மே 17-ஆம் தேதி வரை கல்லூரி வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். 

தொழிற்படிப்புடன் கூடிய பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களும் அத்தகைய படிப்பு நடத்தப்படும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மேற்குறிப்பிட்ட நாள்களில் வழங்கப்படும். 

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.150 ஆகும். தமிழகத்தைச் சேர்ந்த பட்டியல், பழங்குடி இனத்தவருக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அவர்கள் விண்ணப்பத்தை இலவசமாகப் பெற சாதிச் சான்றிதழ் சான்றொப்பமிட்ட நகல் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை நேரடியாக வாங்க விரும்புவோர் ரூ.150-ஐ ரொக்கமாக முதல்வரிடம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். அஞ்சல் மூலம் பெற விரும்புவோர் ரூ.150-க்கான கோடிட்ட வங்கி கேட்பு வரைவோலையினை சம்பந்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பெயரில் எடுத்து சுய விலாசமிட்ட ரூ.15-க்கான தபால் தலை ஒட்டிய உறையுடன் அந்தந்த கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 17 ஆகும் என அதில் கூறப்பட்டுள்ளது.