Saturday, May 4, 2019

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில்  இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்

Tamil Nadu Agricultural University க்கான பட முடிவு

தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகத்தில் இளநிலை பட் டப்படிப்புகளில் சேர மே 8-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தலைவர் ம.கல்யாணசுந்தரம் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகத்தின் கீழ், தமிழகத் தில் கோவை, மேட்டுப்பாளையம், கிள்ளிகுளம், திருச்சி, ஒரத்த நாடு, திருவண்ணாமலை, புதுக் கோட்டை, பெரியகுளம் ஆகிய இடங்களில் 19 உறுப்புக் கல்லூரி களும், வேலூர், பெரம்பலூர், பொள்ளாச்சி, தேனி, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு, கோபி, அரக்கோணம், கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் 27 இணைப்புக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், ஊட்டச்சத்தியல் மற்றும் உணவு முறையியல், பட்டு வளர்ப்பு, பி.டெக். வேளாண்மை பொறியியல், உயிர் தகவலியல் தொழில்நுட்பம் ஆகிய இளநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளின் முதலாம் ஆண்டில் மொத்தம் 3,905 இடங்கள் உள்ளன. இந்த இடங் கள் வரும் 2019-2020-ம் கல்வி ஆண்டில் தகுதியுடைய மாணவர் களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 8-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் http://www.tnau.ac.in/ugadmission.html என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின், விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்த வேண்டும். சிறப்புப் பிரிவு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஜூன் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நேரில் வந்து சான்றிதழ் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஜூன் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்து கொள்ளலாம். 20-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளி யிடப்படும். மேலும் விவரங் களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 0422-6611345, 6611346 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment