Friday, May 24, 2019

மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப படிப்பில் சேர ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப படிப்பி க்கான பட முடிவு

மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சிப்பட் (CIPET) எனப்படும் மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை கிண்டியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தக் கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேர JEE எனப்படும் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இங்கு வழங்கப்படும் டிப்ளமோ இன் பிளாஸ்டிக் மோல்ட் டெக்னாலஜி (DPMT) மற்றும் டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெக்னாலஜி (DPcT) எனப்படும் 3 ஆண்டு கால அளவிலான படிப்புகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பிளாஸ்டிக் பிராசசிங் டெக்னாலஜி (PGD-PT) எனப்படும் ஒன்றரை ஆண்டு கால அளவிலான படிப்புக்கு வேதியியலை ஒரு பாடமாக கொண்ட மூன்றாண்டு இளநிலை அறிவியல் படிப்பை (B.SC) முடித்திருக்க வேண்டும். 

இந்தத் தேர்வுக்கான விண்ணப்பித்தினை என்ற இணையதளத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். நுழைவுத் தேர்வும் ஜூலை மாதம் 7-ஆம் தேதி ஆன்லைனில் மட்டுமே நடைபெற உள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 30-ஆம் தேதி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment