Tuesday, April 30, 2019

முதுநிலை படிப்புகளுக்கு தனி நுழைவுத் தேர்வு: அண்ணா பல்கலை. முடிவு


அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்.இ. உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு தனி நுழைவுத் தேர்வை நடத்த அந்தப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. நிகழாண்டு முதல் அந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்பிஏ, எம்சிஏ, எம்.டெக், எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற முதுநிலை படிப்புகளில் சேர இதுவரை டான்செட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அளவில் கலந்தாய்வு நடைபெறும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும், இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது.வழக்கம்போலவே நிகழாண்டும், டான்செட் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என எதிர்பார்த்து வந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் கொள்கை முடிவு ஒன்றை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் முதுநிலைப் படிப்புகள் அனைத்துக்கும் டான்செட் தேர்வுக்கு பதிலாக தனி நுழைவுத் தேர்வு நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளையில், மற்ற பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு எத்தகைய நடைமுறை பின்பற்றப்படும் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகம் தனி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சில முக்கிய முடிவுகளை எங்களால் எடுக்க இயலும். பல்கலைக்கழக முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மே மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்பது பெரும்பாலான பேராசிரியர்களின் கருத்து. அப்போதுதான் தகுதியான மாணவர்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்க்க முடியும். இல்லையெனில், அவர்கள் வேறு கல்வி நிறுவனங்களைத் தெரிவு செய்ய வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில்கொண்டே தனி நுழைவுத் தேர்வு முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு

வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு க்கான பட முடிவு

கடந்த ஆண்டுகளைப் போன்று நிகழாண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழக பள்ளிகளில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் தங்கள் கல்வித் தகுதிகளை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்து, அடையாள அட்டை பெற ஏற்பாடு செய்யப்பட்டது. அதுபோன்று 2017-ஆம் ஆண்டுவரை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வித் தகுதிகளை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவுகள் செய்யப்பட்டன. இதனால் பதிவுதாரர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி தாங்கள் கல்வி பயின்ற பள்ளிகள் மூலமாகவே பதிவு செய்து கொண்ட காரணத்தால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.  

எனவே கடந்த ஆண்டுகளைப் போன்று இந்த ஆண்டும் அந்தந்தப் பள்ளிகளிலேயே பதிவு மேற்கொள்ளப்படுகிறது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் நிரந்தர சான்றிதழ் வழங்கும் நாளிலிருந்து 15 நாள்களுக்கு அந்தந்தப் பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளவும், அந்தந்த தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்ட நாளே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு (2018) வழங்கிய அதே படிவங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, April 28, 2019

BOAT Southern Region Recruitment 2019 (90 Apprentices Posts)

Related image

Organization Name: Board of Apprenticeship Training, Southern Region

Job Category: Central Govt Apprentices Training 

Total No of Vacancies: 130

Job Location: Cordite factory aruvankadu nilgiris (Tamil Nadu)

Educational Qualification: Diploma., Graduate

Name of the Post & No of Vacancies:
SI No
Name of Post
No. of Post
01
Graduate Apprentices
40
02
Technician (Diploma) Apprentices
90
Total
130

Selection Procedure:
1.
Merit List
2.
Interview
Important Dates for BOAT SR Apprentices Post: 
Starting Date for Submission of Application
22.04.2019
Last date for Submission of Application
06.05.2019
Last date for applying FACTORY ARUVANKADU
08.05.2019
Declaration of Shortlisted list
16.05.2019
Verification of Certificates for shortlisted candidates
23.05.2019
Last Date for Payment of Application Fees
06.05.2019
BOAT SR Apprentices Official Notification & Application Link
BOAT SR Official Website Career Page
BOAT SR Official Notification PDF
BOAT SR Online Application Form

தமிழ்நாடு மின்சாரத்துறையில் 5 ஆயிரம் காலியிடங்கள்



தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 5 ஆயிரம் கேங்க்மேன் (டிரெய்னி) பணியிடங்களுக்கான அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துக்கள். 

பணி: கேங்க்மேன் (பயிற்சி)

காலியிடங்கள்: 5000

தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். பின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை - 1-ல் (அதாவது ரூ.16,200 - 51,500) பொருத்தம் செய்யப்படும். 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, இதர பிரிவினர், மி.மி.வ, சி.ம, பி.வ,பி.வ(மு) ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2019

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.06.2019

TNEB Official Notification & Application Link:

 Official Website Career Page 

Official Notification PDF 

 Online Application Form (Activated) 

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

Image result for 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in இணையதளங்களில் அறியலாம். இதுதவிர பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமும் பள்ளி மாண வர்கள், தனித்தேர்வர்களுக்கு குறுந்தகவல் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மேலும், எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து நுாலகங்களிலும் தேர்வு முடிவு களை அறிய வசதிகள் செய்யப் பட்டுள்ளன. இதையடுத்து தேர்வர்கள் மே 2-ம் தேதி முதல் தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வெழுதிய மையத்தின் தலைமையாசிரியர் மூலம் இணையத்தில் பதிவிறக் கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ள லாம். மாணவர்கள் மே 6-ம் தேதி முதல் www.dge.tn.nic.in இணைய தளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். மறுகூட்டலுக்கு பள்ளி மாணவர்கள் பள்ளிகள் மூலமும் தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் வழியாகவும் மே 2 முதல் 4 வரை விண்ணப்பிக் கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப் பிப்போர் மொழிப் பாடங்களுக்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு: சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் இலவச பயிற்சிக்கு நுழைவுத்தேர்வு மே19-ந்தேதி நடக்கிறது

Related image

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சியை சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்த இருக்கிறது. இதற்கான நுழைவுத்தேர்வு வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்துக்கிறது. இதுதொடர்பாக மனிதநேய பயிற்சி மையத்தில் நிறுவன தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மனிதநேய அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் சைதை துரைசாமியின் மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகம், வருகிற 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறது. இந்த பயிற்சிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள (கிராமப்புற, விவசாய, விளிம்பு நிலையில் உள்ள குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை) மாணவர்களை தேர்வு செய்வதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நுழைவுத்தேர்வை மனிதநேய மையம் நடத்துகிறது. இதற்கான நுழைவுத்தேர்வு வருகிற மே மாதம் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருக்கிறது. நுழைவுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி, உணவு மற்றும் அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும். மேலும் இலவச பயிற்சி வழங்கவும், தகுதியான மாணவர்களை தேர்வு செய்யவும் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டத்தை எங்களுடைய இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://mntfreeias.com/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதள பயிற்சிக்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் நுழைவுத்தேர்வுக்காக இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகும். நுழைவுத்தேர்வுக்கான தேர்வு அனுமதி சீட்டை (ஹால் டிக்கெட்) http://mntfreeias.com/ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து, அதில் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, சுய சான்றொப்பம் இட வேண்டும். மேலும் அதனுடன் தங்களுடைய புகைப்படம் உள்ள அடையாள அட்டையை தேர்வு அனுமதி சீட்டுடன் கட்டாயம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Saturday, April 27, 2019

ஏர் இந்தியாவில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், கண்ட்ரோலர் வேலை

data entry க்கான பட முடிவு

ஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் மற்றும் கண்ட்ரோலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Trainee Controllers
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து Pilot, Cabin Crew-இல் ஒரு ஆண்டு பணி அனுபவம் அல்லது பொறியியல் பாடப்பிரிவில் 3 டிப்ளமோ தேர்ச்சியுடன் Pilot, Cabin Crew-இல் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Data Entry Operator
காலியிடங்கள்: 54
சம்பளம்: மாதம் ரூ.21,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று Data Entry Operator ஆக 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: Trainee Controllers பணிக்கு 30.04.2019, Data Entry Operator பணிக்கு 02.05.2019 நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CMs Department, Air India Limited, GSD Complex, Opps.New ATC Tower Building, Near IGIA Terminal-2, New Delhi - 110 037

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

மேலும் விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மத்திய அரசில் காலியாக உள்ள 50 Assistant Hydrogeologist பணியிடங்களுக்கான அறிவிப்பு


மத்திய அரசில் காலியாக உள்ள 50 Assistant Hydrogeologist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant Hydrogeologist

காலியிடங்கள்: 50

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Geology, Applied Geology, Geo-Exploration, Earth Science & Resource Management, Hydrogeology போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Geology பாடப்பிரிவில் எம்இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Hydrogeology தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2019

விவரங்கள் அறிய Click Here


இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

indian army logo க்கான பட முடிவு

இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத ஆண் பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Lieutenant (TGC-130) (Jan 2020)

காலியிடங்கள்: 40 

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், கணினி டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகாம், டெலிகம்யூனிகேசன், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மைக்ரோவேவ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேசன், இன்ஸ்ட்ரூமெண்டேசன் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: அலகாபாத், போபால், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய இடங்களில் நடைபெறும்.

உதவித்தொகை: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 42 வாரம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது மாதம் ரூ.56,100 உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பி்க்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.05.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேசிய திறந்தவெளி பள்ளியில் வேலை


தேசிய திறந்தவெளிப்பள்ளியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Director (Evaluation)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.1,23,100 - 2,15,900

பணி: Academic Officer 
காலியிடங்கள்: 11
வயதுவரம்பு: 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி திறன் அறிவும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்.

பணி: EDP Supervisor
காலியிடங்கள்: 37
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Assistant
காலியிடங்கள்: 37
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 6 ஆயிரம் வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nios.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2019

விவரங்கள் அறிய Click Here

பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் மின்துறையில் வேலை

central govt logo க்கான பட முடிவு

மத்திய அரசின் மின்துறையில் Sector Expert பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sector Expert 

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.80,000

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Engineering, Science, Economics, Business Administration போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Sector Expert பணியில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.beeindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.05.2019

விவரங்கள் அறிய Click Here

மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

மெட்ரோ ரயில் logo bangalore க்கான பட முடிவு

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள கட்டிட பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சிவில் பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 25

பணி: Graduate Engineer (Civil)

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். GATE 2019 தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிக்க வேண்டும். கன்னட மொழி தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 25,000 

விண்ணப்பிக்கும் முறை: www.english.bmrc.co.in ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து General Manager(HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H.Road, Shanthinagar, Bengaluru 560027 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2019 

விவரங்கள் அறிய Click Here

மத்திய அரசில் 8 ஆயிரம் பணியிடங்கள்: எஸ்எஸ்சி அறிவிப்பு



மத்திய அரசுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்சன் ஆணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 8,000

பணி: Multi Tasking Staff (MTS)

வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ. 5,200 - ரூ.20,200 + தரஊதியம் ரூ.1,800 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்சி, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி சார்ந்த எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.05.2019

விவரங்கள் அறிய Click Here

எம்ஜிஆர் அரசு திரைப்பட கல்லூரி: பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தொடர்புடைய படம்

தமிழக அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை (விஷுவல் ஆர்ட்ஸ்) பட்டப்படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் செய்தி, மக்கள் தொடர்புத் துறையின் கீழ் எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறது. 

இந்த நிறுவனம் கடந்த 2016-17 முதல் தமிழக இசை மற்றும் கவின்கலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு, கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டு, நாட்டிலேயே முதன்முதலாக திரைப்படத் தொழில்நுட்பத்துக்கென இளங்கலை காட்சிக்கலை (விஷுவல் ஆர்ட்ஸ்) பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. 

வரும் கல்வியாண்டில் (2019-20) இளங்கலை - காட்சிக் கலை (Bachelor of Visual Arts) என்ற பட்டப்படிப்பில் ஒளிப்பதிவு, எண்மிய இடைநிலை (டிஜிட்டல் இன்டர்மீடியட்), ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு (எடிட்டிங்), உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் (அனிமேஷன் அண்ட் விஷுவல் எஃபெக்ட்ஸ்) ஆகிய பிரிவுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை திங்கள்கிழமை முதல் கல்லூரியில் இருந்து நேரில் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும், தமிழக அரசின் இணையதளம் (www.tn.gov.in) அல்லது தமிழக அரசின் செய்தி, மக்கள் தொடர்புத் துறையின் இணையதளத்தில் (www.tndipr.gov.in/television-traininginstitute.aspx) பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

10, 11,12 -ஆம் வகுப்புகளுக்கு சிறப்பு துணைத் தேர்வு: அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு சிறப்புத் துணைத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. 


இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்த தகவல்:

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு வரும் ஜுன் 6-ஆம் தேதி தொடங்கி ஜுன் 13-ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 வரையிலும், பழைய வினாத்தாளை அடிப்படையாகக் கொண்ட தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.

பிளஸ் 1 வகுப்புக்கான சிறப்புத் துணைத் தேர்வு ஜுன் 14-ஆம் தேதி தொடங்கி ஜுன் 21-ஆம் தேதி முடிவடைகிறது. காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை தேர்வுகள் நடைபெறும். 

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு ஜுன் 14-ஆம் தேதி தொடங்கி ஜுன் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்றார்.

Saturday, April 20, 2019

+2 மாணவர்களுக்கு பயனுள்ள அரசு கல்லூரிகள் நுழைவு தேர்வு , மற்றும் சேர்க்கை விவரம்

தொடர்புடைய படம்

+2 மாணவர்களுக்கு பயனுள்ள அரசு கல்லூரிகள் நுழைவு தேர்வு , மற்றும் சேர்க்கை விவரம்...

பத்தாம் வகுப்புக்கு ஜூன் மாதம் உடனடி சிறப்புத் தேர்வு  தனித்தேர்வர்களுக்கான தத்கால் விண்ணப்ப பதிவு 23-ல் தொடக்கம் 

தொடர்புடைய படம்

ஜூன் மாதம் நடக்கவுள்ள பத்தாம் வகுப்பு உடனடி சிறப்பு தேர்வுக்கு தனித்தேர்வர்கள் தத்கால் முறையில் ஏப்ரல் 23, 24-ம் தேதி களில் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்புக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாதம் நடத்தப்பட உள்ளது. பொதுத்தேர்வு எழுத தவறிய தனித்தேர்வர்கள் உடனடி சிறப்புத் தேர்வுக்கு இணையதளம் மூலம் கடந்த ஏப்ரல் 8 முதல் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை தவறவிட்ட தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தத்கால்) வரும் 23. 24-ம் தேதிகளில் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப் பட்டுள்ள தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு சென்று இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். தேர்வெழுத விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள், கட்டணமாக ரூ.675 செலுத்த வேண்டும். பதிவு செய்த பின்னர் தரப்படும் ஒப்புகை சீட்டை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். ஏனெனில், அதிலுள்ள விண்ணப்ப எண்ணை கொண்டுதான் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய முடியும். இப்போதைய சமச்சீர் பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் சிறப்பு தேர்வே இறுதி வாய்ப்பாகும். மேலும், தனித்தேர்வர்கள் விண் ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் மட்டுமே தேர்வு எழுத முடியும். இதுதொடர்பான கூடுதல் விவரங் களை தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இப்போதைய சமச்சீர் பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் சிறப்பு தேர்வே இறுதி வாய்ப்பாகும்.

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

தொடர்புடைய படம்

பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் தங்களது குழந்தைகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு அல்லது எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க திங்கள்கிழமை (ஏப்.22) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஏழை பெற்றோரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பெற முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதையடுத்து கடந்த 2009ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது.அனைத்து தனியார் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. சேர்க்கையில் 25 சதவீத இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அந்தச் சட்டம். அதன்படி தமிழகத்தில் 20132014ஆம் கல்வி ஆண்டில் இருந்து, ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தேவையான ஆவணங்கள்: வரும் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற ஏப்.22ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பம் செய்பவர்கள் குழந்தையின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும்.
எங்கு விண்ணப்பிக்கலாம்?: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான ஆய்வாளர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையவழியில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒப்புகைச் சீட்டு அவசியம்: இது தொடர்பாக பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால், பெற்றோர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள இடங்களில் இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம். ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி மாணவர் தேர்வு செய்யப்படுவர்.

Thursday, April 18, 2019

தொழில்நுட்பப்பட்டயப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை


தொடர்புடைய படம்

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் (MSME- Micro Small and Medium Enterprises) நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கிவருகிறது Central Institiute of Tool Design (CITD)எனும் தொழில்நுட்பப் பயிற்சி கல்விநிறுவனம். இது 1968ம் ஆண்டு ஐதராபாத்தில் அமைக்கப்பட்டது. இதன் கிளை வளாகங்கள் சென்னை மற்றும் விஜயவாடாவில் உள்ளன.

இக்கல்விநிறுவனம் இந்தியாவின் பாரம்பரிய உயர்கல்வி நிறுவனங்களுள் ஒன்று. Tool Design and Manufacturing, CAD, CAM, Electronics, Mechatronics மற்றும் Robotics போன்ற பல துறைகளைச் சார்ந்த பல்வேறு டிப்ளமோ, முதுகலை மற்றும் சான்றிதழ் படிப்புகளை சர்வதேச தரத்தில் வழங்கிவருகிறது இக்கல்விநிறுவனம். 2019ம் கல்வியாண்டிற்கான பல்வேறு டிப்ளமோ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது. 

வழங்கப்படும் படிப்புகள்: நான்கு வருட கால அளவு கொண்ட Diploma in Tool, Die & Mould Making (DTDM), மூன்று வருட கால அளவிலான Diploma in Electronics and Communication Engineering (DECE), Diploma in Automation & Robotics Engineering (DARE) மற்றும் Diploma in Production Engineering (DPE) போன்ற நான்கு டிப்ளமோ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி: விருப்பமுள்ள மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் 50% மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். எஸ்.சி / எஸ்.டி மாணவர்கள் 45% மதிப்பெண்கள் பெற்றிருப்பது போதுமானது. 

வயதுவரம்பு: விண்ணப்பிக்க விரும்புவோர் 1.4.2019 அன்றின்படி 15 வயதிற்கு குறையாமலும் 19 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு வயது வரம்பில் ஐந்து வருட தளர்வு அனுசரிக்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.citdindia.org என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் ரூ.700, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் ரூ.350 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். The Director, Central Institiute of Tool Design , Balanagar, Hydrabad- 500 037 என்ற முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.4. 2019.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: கல்வி

நிறுவனத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 

மேலும் விவரங்களுக்கு www.citdindia.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும். 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

plus 2 result students க்கான பட முடிவு





HSE(+2) March 2019 Exam Results expected on 19th April @ 09:30 Hrs.


Link 1

Link2

Link3

தமிழ்நாடு நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு வாரியத்தில் உதவியாளர், தட்டச்சர் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு வாரிய க்கான பட முடிவு

தமிழ்நாடு நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு வாரியத்தில் தற்போது காலியாக உள்ள 91 இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 91

பணி: Assistant (Junior Assistant)
காலியிடங்கள்: 36

பணி: Typist 
காலியிடங்கள்: 55
சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 62,000

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினி பிரிவில் 6 மாத கால சான்றிதழ் படிப்பு, தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு பிரிவில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpcb.gov.inன்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2019

விவரங்கள் அறிய Click Here

இந்திய அணுசக்தி கழக நிறுவனத்தில் டிரெய்னி பணி: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!


மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Executive Trainee

காலியிடங்கள்: 200

வயதுவரம்பு: 23.04.2019 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஸ்ட்ருமென்டேஷன் போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக், பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 2017,2018, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற GATE நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

உதவித்தொகை: பயிற்சின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.35,000 வழங்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2019

விவரங்கள் அறிய Click Here

தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


தமிழக அரசின் மருத்துவ சேவை மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளில் காலியாக உள்ள டிரக் இன்ஸ்பெக்டர், ஜூனியர் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்தம் காலியிடங்கள் : 49 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Drugs Inspector - 40 
சம்பளம்: மாதம் ரூ. 37,700 - 1,19,500
தகுதி: பார்மஸி, பாராமெடிக்கல், மைக்ரோ பயோலாஜி ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Junior Analyst in the Drugs Testing Laboratory - 09 
சம்பளம்: மாதம் ரூ. 36,400 - 1,15,700
தகுதி: பார்மஸி, பாராமெடிக்கல் கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 48 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசுவிதிகள்படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு தளர்ச்சி வழங்கப்படும்.

பணி அனுபவம்: 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கேவை, திச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய நகங்களில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ஒரு முறை பதிவுக்கட்டணம் ரூ.150 மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.200 என ரூ.350 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.05.2019

விபரங்கள் அறிய Click Here


தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

தொடர்புடைய படம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தேர்வுத்துறைத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வுகள் வரும் ஜுன் 14-ஆம் தேதி முதல் ஜுன் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பத்தையும், பக்கம் 1 முதல் 3 வரையுள்ள அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து தேர்வரின் தகுதி மற்றும் அறிவுரைகளையும் பின்பற்றி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கெனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து ஏப்.23 முதல் ஏப்.30 வரையிலான நாள்களில் தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். 

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா' மூலமாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்னர் அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்த தேர்வரே நேரில் சென்று அணுக வேண்டும். தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். 

தேர்வுக் கட்டணம் விவரம்: ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் (முதலாமாண்டு)- ரூ.100, மதிப்பெண் சான்றிதழ் (இரண்டாமாண்டு) ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம்- ரூ.15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் (ஒரு விண்ணப்பத்துக்கு)- ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஏப்.23-இல் மதிப்பெண் சான்றிதழ்... தமிழகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவ, மாணவிகள் அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலமாகவும் ஏப். 23 செவ்வாய்க்கிழமை முதல் மதிப்பெண் சான்றிதழ்களைப்பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Sunday, April 14, 2019

விளையாட்டு உதவித் தொகை பெற மே 3-க்குள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு உ க்கான பட முடிவு

கால்பந்து, கிரிக்கெட் உள்பட பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்திய உணவுக் கழகத்தின் தென் மண்டலப் பிரிவு சார்பில் வஸ்ழங்கப்படும் உதவித்தொகை பெற மே 3 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

*இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுத் துறையில் திறமை மிக்கவர்களை, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களை ஊக்குவித்து, அவர்களது விளையாட்டுத் திறமையை மேம்படுத்தும் விதமாக, இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டலப் பிரிவு உதவித்தொகை வழங்க உள்ளது

அதன்படி, 2019- 2020 ஆம் ஆண்டுக்கு, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி, லட்சத் தீவுகள் மற்றும் அந்தமான் - நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களும், 18 முதல் 24 வயது வரை உள்ள கிராமப்புற, நகர்ப்புற மாணவர், மாணவர் அல்லாதோரும் விண்ணப்பிக்கலாம்

கால்பந்து (ஆண்கள்), ஹாக்கி (ஆண்கள்), கிரிக்கெட் (ஆண்கள்), டேபிள் டென்னிஸ் (ஆண்கள் மற்றும் பெண்கள்), பேட்மிண்டன் (ஆண்கள் மற்றும் பெண்கள்), பளு தூக்குதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்), தடகளம் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய விளையாட்டுப் பிரிவுகளில் திறமை மிக்கவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3 ஆகும்

மேலும், விவரங்களுக்கு www.fci.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வு: 5.88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்



தொடர்புடைய படம்

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் இரு தாள்களிலும் சேர்த்து மொத்தம் 5.88 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவற்றை எழுதுவதற்கு தகுதியுடையவர்கள் ஆன்லைன் மூலம் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று ஏப்ரல் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க காலக்கெடுவினை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

அதன்படி விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயரதிகாரிகள் கூறியது: கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எழுதுவதற்கு சுமார் 1 லட்சத்து 78 ஆயிரம் விண்ணப்பதாரர்களும் மற்றும் தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக சுமார் 5 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும் என்றனர்.

பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுகள்: ஏப்.15, 16- இல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்


தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட கால அவகாசத்தில் விண்ணப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஏப்.15, 16 ஆகிய நாள்களில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. 

இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநில அளவில் ஜூன் 2019-இல் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்துறை சேவை மையங்களுக்குச் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில், பழைய பாடத் திட்டத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதோர், பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத, வரும் ஜூன் மாதம் சிறப்பு துணைத் தேர்வு எழுத இறுதி வாய்ப்பாகும்.

இந்தத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கெனவே கடந்த 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்கள் அரசுத் தேர்வு மையத்துக்கு ஏப்.15, 16 ஆகிய இரு தினங்களில் நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1,000 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50-ஐ பணமாக மட்டுமே அரசுத் தேர்வுத்துறை சேவை மையத்தில் செலுத்த வேண்டும். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அரசுத் தேர்வு மையங்களின் விவரத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், அந்த மையங்களிலேயே தேவையான விவரங்களைப் பெற்று தேர்வுக் கட்டணத்தையும் செலுத்தலாம். இதில் இணையதளத்தில் பதிவு செய்த பின், தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்ட விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே அரசு தேர்வுத் துறை அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுக்கூட சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய முடியும். அதனால் இந்த ஒப்புகைச்சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலை. மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு

சென்னைப் பல்கலை க்கான பட முடிவு

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு தேர்வுகளுக்கான மறுமதிப்பீடு முடிவுகள்  வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தொலைதூரக் கல்வியில் இளநிலை படிப்புகளுக்கும், எம்ஏ, எம்காம், எம்எஸ்சி, எம்எல்ஐஎஸ் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கும், சில சான்றிதழ் படிப்புகளுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வுகள் நடைபெற்றன. 

அதன் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, சிலர் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்திருந்தனர்.
அதன் முடிவுகள் www.ideunom.ac.in என்ற இணையதள முகவரியில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.