Saturday, April 27, 2019

இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

indian army logo க்கான பட முடிவு

இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத ஆண் பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Lieutenant (TGC-130) (Jan 2020)

காலியிடங்கள்: 40 

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், கணினி டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகாம், டெலிகம்யூனிகேசன், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மைக்ரோவேவ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேசன், இன்ஸ்ட்ரூமெண்டேசன் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: அலகாபாத், போபால், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய இடங்களில் நடைபெறும்.

உதவித்தொகை: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 42 வாரம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது மாதம் ரூ.56,100 உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பி்க்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.05.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment