Sunday, April 28, 2019

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு: சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் இலவச பயிற்சிக்கு நுழைவுத்தேர்வு மே19-ந்தேதி நடக்கிறது

Related image

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சியை சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்த இருக்கிறது. இதற்கான நுழைவுத்தேர்வு வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்துக்கிறது. இதுதொடர்பாக மனிதநேய பயிற்சி மையத்தில் நிறுவன தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மனிதநேய அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் சைதை துரைசாமியின் மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகம், வருகிற 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறது. இந்த பயிற்சிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள (கிராமப்புற, விவசாய, விளிம்பு நிலையில் உள்ள குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை) மாணவர்களை தேர்வு செய்வதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நுழைவுத்தேர்வை மனிதநேய மையம் நடத்துகிறது. இதற்கான நுழைவுத்தேர்வு வருகிற மே மாதம் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருக்கிறது. நுழைவுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி, உணவு மற்றும் அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும். மேலும் இலவச பயிற்சி வழங்கவும், தகுதியான மாணவர்களை தேர்வு செய்யவும் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டத்தை எங்களுடைய இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://mntfreeias.com/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதள பயிற்சிக்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் நுழைவுத்தேர்வுக்காக இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகும். நுழைவுத்தேர்வுக்கான தேர்வு அனுமதி சீட்டை (ஹால் டிக்கெட்) http://mntfreeias.com/ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து, அதில் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, சுய சான்றொப்பம் இட வேண்டும். மேலும் அதனுடன் தங்களுடைய புகைப்படம் உள்ள அடையாள அட்டையை தேர்வு அனுமதி சீட்டுடன் கட்டாயம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment