Thursday, November 22, 2018

கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

கடலோர காவல்படை க்கான பட முடிவு

இந்திய கடலோர காவல்படையில் ‘குரூப்-ஏ’ பிரிவின் கீழ் வரும் கெசட்டடு அதிகாரி தரத்திலான உதவி கமாண்டன்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: உதவி கமாண்டன்ட்

வயது வரம்பு: ஜெனரல் டியூட்டி (ஆண் - பெண்) விண்ணப்பதாரர்கள் 1.7.1994 மற்றும் 30.6.1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர் களாக இருக்க வேண்டும். ஜெனரல் டியூட்டி பைலட் மற்றும் கமர்சியல் பைலட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 1.7.1994 மற்றும் 30.6.2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் ஜெனரல் டியூட்டி (ஆண்-பெண்) மற்றும் ஜெனரல் டியூட்டி பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ் டூ படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். படிப்பை இடைவெளியின்றி அதாவது 10+2+3 முறையில் முடித்தவராக இருக்க வேண்டும்.

12-ம் வகுப்பில் இயற்பியல் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன், கமர்சியல் பைலட் லைசென்சு பெற்றவர்கள் பைலட் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நுண்ணறிவுத் திறன் தேர்வு, உளவியல் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்து பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் http://joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2018

No comments:

Post a Comment