Thursday, November 22, 2018

குரூப் 2 தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை: 9 கருணை மதிப்பெண்கள் வழங்க டிஎன்பிஎஸ்சி உத்தரவு

tnpsc க்கான பட முடிவு

குரூப்-2 தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை விவகாரத்தில், தவறான கேள்விகளுக்காக 9 மதிப்பெண்கள் வழங்க வல்லுநர் குழுவிற்கு டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் ஆணை பிறப்பித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்புத் துறை இளநிலை அலுவலர், சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் என 1,199 பணியிடங்களுக்கான காலியாக உள்ளன. அப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-2 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் பதவிக்கான போட்டித் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 268 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, குரூப்- 2 முதல்நிலைத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.11) ஆம் தேதி நடைபெற்றது.

நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தேர்வு வினாத்தாளில், திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு இ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என். அண்ணாதுரை என்பதில் எது சரியான பதில் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 

இ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என். அண்ணாதுரை என்பதில் எது தந்தை பெரியாரின் பெயர் தவறாகவும், நாயக்கர் என சாதி பெயரையும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தந்தை பெரியார் அவமதிக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அப்படிப்பட்ட பெரியாருக்கு சாதி அடையாளம் சூட்டுவதும், அதுவும் அரசுத்தேர்வில் அடையாளப்படுத்துவதும் அயோக்கியத்தனமானது மட்டுமல்ல; தேர்வு எழுதுவோரின் மனதில் பிற்போக்குத் தனமான எண்ணத்தை விதைப்பதுமாகும். இதற்கு, காரணமானவர்களைப் பணிநீக்கம் செய்யவேண்டும். தமிழக அரசு இந்த அடாத செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். 

இதுபோன்று 6 கேள்விகளுக்கு தவறான விடை கேட்கப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியியானது.

இதையடுத்து குரூப் 2 தேர்வில் பெரியாரின் சாதி பெயரை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், குரூப் 2 தேர்வில் தவறான விடை கொடுக்கப்பட்டிருந்த 6 கேள்விகளுக்கு, ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் என்ற கணக்கில் 9 மதிப்பெண்கள் வழங்க வல்லுநர் குழுவிற்கு டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் ஆணை பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment