Tuesday, June 5, 2018

வேலையில்லையா... சில யோசனைகள்!

Image result for வேலை

இன்று பலர் என் படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை. என்றோ.. அல்லது இந்த வேலை எனக்குத் தெரியாது, அந்த வேலை எனக்கு ஒத்துவராது என்று சொல்லிக் கொண்டு வேலைக்குச் செல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. வேலைவாய்ப்பின்மையைச் சமாளிக்கவும் வேலை தேடுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் சில சிறந்த வழிகள்

சுய உதவி பெறலாம்: 

நீண்ட காலம் வேலை இல்லாமல் இருப்பது உங்கள் சுய மரியாதையைப் பாதிப்பதோடு அது தன்நம்பிக்கையை குறைக்கும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே உரிய நபர்களிடம் சிறந்த ஆலோசனைகளைப் பெறுவதோடு, உள்ளூர் நூலகம், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடனான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் வேலைவாய்ப்புகளை நீங்கள் பெறக்கூடும். 

வேலைக்கான உதவியைப் பெறுங்கள்:

தற்போதைய தேடல் வெற்றியடையவில்லை என்றால் புதிய வாய்ப்புகளுக்கு பொருத்தமாக உங்கள் விண்ணப்பத்தை மாற்றிக் கொள்ளலாம். வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஏற்றவாறு தகுதியை, தனித்திறனை வளர்த்துக் கொள்வது அவசியம். திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பைப் பெறுவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் அனுபவங்களை ஏற்படுத்திக் கொள்வதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். 

பிற வேலைவாய்ப்புகளையும் கருத்தில் கொள்ளுங்கள்: 

உங்கள் முந்தைய வேலையின் ஊதியத்தை விட குறைந்த ஊதியத்தில் வேறு ஒரு வேலையை ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கலாம். எனினும் பகுதி நேர வேலை மற்றும் சில ஒப்பந்தப் பணிகளைச் செய்வதால் கிடைக்கும் ஊதியத்தின் மூலம் உங்கள் தொலைபேசிக் கட்டணம், புதிய வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் செல்வதற்கான செலவுகளைச் சமாளிக்க முடியும். 

விரும்பிய நிறுவனத்தை நோக்கிச் செல்லுங்கள்:

ஏதேனும் ஒரு நிறுவனத்தின் மீது உங்களுக்கு ஆர்வமோ, அல்லது பெரும் மதிப்போ இருக்குமானால் அந்த நிறுவனத்தில் கடைநிலைப் பணியானாலும் ஏற்றுக் கொண்டு நிறுவனத்தோடு உங்களை இணைத்துக் கொள்வது நல்லது. பின்னர் உங்கள் திறமையை, நேர்மையைப் பயன்படுத்தி அந்நிறுவனத்தில் உயர் பதவியை அடையும் வாய்ப்பை உருவாக்கலாம். 

நேர்காணலுக்கான திறன்களை வளர்த்தல்: 

நேர்காணலின் போது உங்களுக்கு அதிக நம்பிக்கை, தைரியம் தேவைப்படலாம் அல்லது ஒரு நிர்வாக உதவியாளராக சிறந்த தொழில்நுட்ப திறன்கள் தேவைப்படலாம். இணைய தளம் மற்றும் உள்ளூர் பயிற்சி மையங்கள் இதற்கான வகுப்புகளை நடத்துகின்றன. அதன்மூலம் திறனை வளர்த்துக் கொண்டு தகுந்த வேலையை அமைத்துக் கொள்ளுங்கள். 

வேலை என்பது ஊதியத்துக்கானது மட்டுமல்ல. நம்மை நமக்கும் பிறருக்கும் அடையாளப்படுத்துவதும் ஆகும்.

No comments:

Post a Comment