Sunday, June 17, 2018

B.Ed - சேர்க்கையில் சுயநிதி கல்லூரிகளுக்கு ஆசிரியர் பல்கலை. புதிய உத்தரவு

Image result for B.Ed - சேர்க்கையில் சு

பிஎட் மாணவர் சேர்க்கையின்போது ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 25மாணவர்களுக்கு மேல் சேர்க்கக் கூடாது என்று தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரி களுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2018-2019-ம் கல்வி ஆண்டில் பிஎட் மாணவர் சேர்க்கையின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.ரவீந்திரநாத் தாகூர் தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் செயலர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள முதல்வர் பணியிடத்தை உடனடியாக நியமனம் செய்து ஜூன் 29-ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்திடம் ஒப்பு தல் பெற வேண்டும். கல்லூரியில் நடத்தப்படும் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆசிரியர்கள் இல்லாத பாடப்பிரிவுகளில் மாணவர்களை சேர்க்கக் கூடாது.

2018-19-ம் கல்வி ஆண்டில் வகுப்புகள் தொடங்கும் நாள் முதல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறையை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். பிஎட் வகுப்பில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 25 மாணவர்களுக்கு மேல் சேர்க்கக் கூடாது.ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் மாதஊதியத்தை அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். மேற் குறிப்பிட்ட நெறிமுறைகளை பின்பற்றாத கல்லூரிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment