Friday, June 1, 2018

இன்டெர்வியூ பதற்றத்தை குறைக்க உதவும் 10 வழிமுறைகள்!

Related image

பொதுவாக ஒரு சிலருக்கு புதிய இடங்களுக்கு சென்றால் இனம்புரியாத பதற்றம் தொற்றிக்கொள்வது வழக்கம் இதற்கு இன்டெர்வியூ மட்டும் விதிவிலக்க என்ன? இது போன்ற பதட்டத்தை தவிற்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

1. கேள்வி கேளுங்கள்:

ஆம் உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள். ஏன் பதட்டம் அடைகிறோம், எங்கிருந்து வருகிறது இந்த பதட்டம்.என்ற கேள்விகளுக்கான விடை கிடைக்கும் பட்சத்தில் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

முதலில் உங்களை முழுமையாக நம்புங்கள். "குறைகுடம்தான் கூத்தாடும்" என்று ஒரு பழமொழி உண்டு. எனவே நீங்கள் தன்நம்பிக்கை என்ற தண்ணீரினால் முழுமையாக நிரப்பப்படும் போது பதற்றம் எண்ணும் வெற்றிடம் தானாகவே நிரப்பப்பட்டுவிடும்.

2. பதில் அளிக்க தயாராகுங்கள்:

உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல் என்ன, அல்லது எந்த வேலைக்காக விண்ணப்பித்துள்ளோமோ அது குறித்த கேள்விகளுக்கு எப்படி விடையளிப்பது என்பதை சிந்திக்கும் போது, பதற்றம் நம்மை விட்டு தானாகவே அகல வாய்ப்புள்ளது.

3. நிறுவனத்தை அறிதல்:

நீங்கள் நேர்முகத்தேர்வுக்கு செல்லும் நிறுவனத்தை பற்றி முழுமையாக அறிந்து வைத்திருப்பது. கடைசிநேர படபடப்பு, பதற்றம், பயம் போன்றவைகளை தவிர்க்கும். எனவே விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் முகவரி மட்டுமல்லாது நிறுவனத்தின் முழு ஜாதகமும் உங்கள் கையில் இருக்க வேண்டும்.

4. மனதை ஒருமுகப்படுத்தல்:

உங்களை நீங்களே ஆற்றுப்படுத்த முயற்சி மேற்கொள்ளுங்கள். இதை இப்படிக்கேட்டால் என்ன செய்வது, அப்படிக் கேட்டால் என்ன செய்வது போன்ற வரம்பு மீறிய தேவையில்லாத சிந்தனைகளை மனதில் ஓட விடாதீர்கள். மனதை ஒருமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ளுங்கள்.

5. ஒரு நாள் முன்னதாக ரெடியாவது:

நேர்முகத்தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக எல்லாத்தையும் தயார் செய்து வைத்துக்கொள்வது கடைசி நேர படபடப்பை தவிர்ப்பதற்கான வழி, முன்னதாக ஷு, சாக்ஸ், டை, பெல்ட் போன்ற பொருட்களை அடையாளம் கண்டு ஒரு இடத்தில் வைக்க முற்படுங்கள். ஒரு நாள் முன்னதாக தயாராகும் பட்சத்தில் இதை மறந்து விட்டோமே, அதை மறந்து விட்டோமே போன்ற பதற்றத்தை தவிற்கலாம்.

6. நிம்மதியான தூக்கம்:

இன்டெர்வியூ செல்வதற்கு ஒருநாள் முன்னதாக நிம்மதியான தூக்கம் அவசியம். சரியான தூக்கம் இல்லாதபட்சத்தில் நீங்கள் இன்டெர்வியூ அறையில் தூங்கிவழியும் முகத்தோடு அமர நேரிடும்.

எனவே முன்னதாக தூங்க சென்று காலையில் நேரமாக எழுவது சரியான நேரத்திற்கு புத்துணர்சியாக செல்ல வழிவகுக்கும்.

7. உணவை மறக்காதீர்கள்:

இன்டெர்வியூ அவசரத்தில் காலை உணவை மறக்கவே, மறுக்கவே வேண்டாம். ஏதோ ஒன்றை சிறிதளவேனும் எடுத்துக்கொள்வது இன்டெர்வியூ கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் அளிப்பதில் இருந்து வீடும் திரும்பும் வரை நமக்கு உறுதுணை புரியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

8. பயண திட்டம்:

இதுவும் பதற்றம் வருவதற்கான ஒரு காரணம். இன்டெர்வியூ நேரத்திற்கு 15-30 நிமிடத்திற்கு முன்னதாக செல்ல திட்டமிடுங்கள்.

எனென்றால் அரசு பேருந்துக்கோ, டிராபிக் காவலருக்கோ நீங்கள் இன்டெர்வியூக்கு தான் செல்கிறீர்கள் என்பது தெரியாது. பின்பு நீங்கள் அவர்களை கடிந்து ஒரு பயனும் இல்லை.

9. மாதிரி கேள்விகளுக்கு விடை:

நம் விண்ணப்பித்துள்ள பணி தொடர்பான மாதிரி கேள்விகளுக்கு விடையளித்து பயிற்சி மேற்கொள்வது நம் மீதான தன் நம்பிக்கையை மிளிர செய்யும். இது போன்ற கேள்விகளுக்கு இப்படி விடையளிக்கலாம் என்ற நிபுணத்துவத்தை மேம்படுத்தும்.

10. சிரிப்பு:

இன்டெர்வியூ செய்பவர் முன் பின் அறியாதவர்களாக இருக்கலாம் அவர்கள் முன் அசட்டுதனமாகவே, பயத்துடன் கூடிய சிரிப்பாகவே உதிர்க்காமல். பூக்கள் மலர்வதைப் போல் புன்னகையை தவழ விட மறக்காதீர்கள். எனென்றால் முதல் சந்திப்பே உங்கள் வேலையை உறுதி செய்வதாகக் கூட இருக்கலாம்.

No comments:

Post a Comment