Saturday, May 19, 2018

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் மருத்துவக் கலந்தாய்வு

Image result for ஆன்லைனில் மருத்துவக் கலந்தாய்வு

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு (2019 - 2020) முதல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எம்.பி.பி.எஸ்., முதுநிலை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான அகில இந்தியக் கலந்தாய்வு இணையதளம் மூலமாகவே நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வும் நிகழாண்டில் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. 

மருத்துவப் படிப்புகளுக்கும் நிகழ் கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என்று கடந்த ஆண்டே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியது: மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையிலா அல்லது பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலா என்ற குழப்பம் நீடித்தது. அதன் காரணமாக ஆன்லைனில் கலந்தாய்வை நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது. 

தற்போது மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு என்பது உறுதியாகி விட்டதால், அடுத்த கல்வியாண்டு முதல் ஆன்லைனில் கலந்தாய்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், கலந்தாய்வை நடத்துவதற்கான செலவும் குறையும். மாணவர்கள் பெற்றோருக்கும் தேவையற்ற அலைச்சல் இருக்காது.

No comments:

Post a Comment