Saturday, May 19, 2018

ரயில்வே பாதுகாப்பு படையில் 9739 காலியிடங்கள் அறிவிப்பு

Image result for indian railway

இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் சுமார் 20 ஆயிரம் காவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில், இந்திய ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப்படையில் (ஆர்பிஎஸ்எஃப்) காலியாக உள்ள 2018-19 ஆண்டிற்கான 9 ஆயிரத்து 739 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு பணிக்காக காத்திருக்கும் இரு பாலரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரும் ஜூன் 30க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்த காலியிடங்கள்: 9739

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி: Constable & Sub Inspector

தகுதி: 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஆண் விண்ணப்பத்தாரர்கள் 165 செ.மீ உயரமும், பெண் விண்ணப்பதாரர்கள் 157 செ.மீ உயரமும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 

மாதம் ரூ.21,700 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 

01.07.2018 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, அளவீட்டு தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம், சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: 

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை

http://constable.rpfonlinereg.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 01.06.2018 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2018

RPF Online Application & Official Notification:
Notification PDF: Click Here
Online Application: Click Here

No comments:

Post a Comment