Wednesday, May 2, 2018

எஸ்.ஆர்.எம்.நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: வரும் 7-இல் கலந்தாய்வு தொடக்கம்

Related image

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். தொழில்நுட்ப நிறுவனத்தில் இளநிலை பொறியியல் படிப்புச் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

இது குறித்து எஸ்.ஆர்.எம்.தலைவர் பி.சத்தியநாராயணன் கூறியது:

இங்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் சுறுசுறுப்பான கற்றல் , பயிற்றுவிக்கும் மையம் மற்றும் பலதரப்பட்ட இயல்பைக் கொண்ட கற்பித்தல் மூலம் பயன்பெறலாம். உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் மாணவர்கள், எங்களின் ஆசிரியரிடமிருந்தும், உயர்ந்த அளவிலான உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் தொழில் தொடர்புகளையும் பெருமளவில் கற்றுக்கொள்ள முடியும்.

காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். தொழில்நுட்ப நிறுவனத்தின் வளாகத்தில் மே 7 முதல் 20 வரை கலந்தாய்வு நடைபெறும். எஸ்.ஆர்.எம். தொழில்நுட்ப நிறுவனம், ஹரியானா மற்றும் எஸ்.ஆர்.எம். தொழில்நுட்ப நிறுவனம் ஆந்திரா, அமராவதியில் மே 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையிலும் கலந்தாய்வு அந்தந்த வளாகங்களில் நடைபெறும்.

மாணவர்கள் தங்கள் டாஷ்-போர்டில் உள்நுழைவதன் மூலம் தங்கள் தரவரிசை அட்டை, கலந்தாய்வு அழைப்பு கடிதம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். முதல் நாள் கலந்தாய்வில், தரவரிசை அடிப்படையில் நிறுவனர் உதவித் தொகை வழங்கப்படும். முதல் 100 தரவரிசைக்கு 100 சதவீத கல்வி கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

101 முதல் 500 வரையிலான தரவரிசைக்கு 100 சதவீதம் கல்வி கட்டண தள்ளுபடி செய்யப்படும். 501 முதல் 1000 வரையிலான தரவரிசைக்கு 75 சதவீதம் கல்வி கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

தரவரிசை 1001 முதல் 2000 வரை இடம்பெறுவோருக்கு 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடியும், 2001 முதல் 3000 வரையிலான தரவரிசையில் இடம்பெறுவோருக்கு 25 சதவீதம் கல்வி கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும். அனைத்து எஸ்.ஆர்.எம். குழுமங்களிலும் ரூ.30 கோடி மதிப்புள்ள கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

1 லட்சத்து 72 ஆயிரத்து 825 மாணவர்கள் நுழைவு தேர்வுக்கு பதிவு செய்தனர். அவர்களில் 76 ஆயிரம் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். நாட்டில் 123 மையங்களிலும், மத்தியப் பகுதி முழுவதும் 5 மையங்களிலும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. மொத்த விண்ணப்பதாரர்களில் பெரும்பாலான மாணவர்கள் தமிழ்நாடு, உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரம், தில்லி, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றார் பி.சத்தியநாராயணன்.

No comments:

Post a Comment