Thursday, April 26, 2018

அண்ணாமலைப் பல்கலை. வேளாண், பி.பார்ம் படிப்புகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு வியாழக்கிழமை தொடங்கியது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் 2018-2019-ஆம் ஆண்டுக்கான இளநிலை அறிவியல் வேளாண்மை (B.Sc., (Hons.) in Agriculture),  இளநிலை அறிவியல் வேளாண்மை (சுய நிதி) (B.Sc., (Hons.) in Agriculture } Self Supporting), இளநிலை அறிவியல் தோட்டக்கலை (B.Sc., (Hons.) in Horticulture), இளநிலை மருந்தாக்கியல் பட்டப்படிப்பு (B.Pharm), இளநிலை அறிவியல் செவிலியர் (B.Sc. Nursing), இளநிலை இயற்பியல் சிகிச்சை (B.P.T), இளநிலை தொழில்முறை சிகிச்சை (B.O.T), இளநிலை மீன்வள அறிவியல் (B.F.Sc.) மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகளுக்கு இணைய வழியில் (ஆன்-லைன்) 26-4-2018 முதல் 31-5-2018 வரை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் முறையை பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

விண்ணப்பக் கட்டண விவரம்: 
  • இளம் அறிவியல் வேளாண்மை, இளம் அறிவியல் தோட்டக்கலை படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.400. மற்றவர்களுக்கு ரூ.800. 
  • இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி) படிப்புக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,500. 
  • இளநிலை மீன்வள அறிவியல் படிப்புக்கு, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.400. இதர பிரிவினருக்கு ரூ.800. 
  • இளநிலை மருந்தாக்கியல் பட்டப் படிப்பு, இளநிலை அறிவியல் செவிலியர், இளநிலை இயற்பியல் சிகிச்சை , இளநிலை தொழில்முறை சிகிச்சை ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.800.
  • ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளுக்காக எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.200. இதர பிரிவினருக்கு ரூ.400.

இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 31-ஆம் தேதி என துணைவேந்தர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment