Thursday, December 29, 2022

CBSE – 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!

 


Download CBSE 10&12th Date Sheet

UGC NET 2023: தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு



இந்தியா முழுவதும் இளநிலை ஆராய்ச்சி படிப்பிற்காக உதவித்தொகை பெறுவதற்கு மற்றும் உதவி பேராசிரியர் தகுதிக்கான UGC NET தேர்வு ஆண்டுக்கு இருமுறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான டிசம்பர் மாத UGC NET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறையை நேற்று முதல் UGC தொடங்கியுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மூலமாக உயர்கல்வி துறைகளில் ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகைக்கான சான்றிதழை பெறலாம்


இதே போல் இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றலாம். இத்தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. இதன் முதல் தாளில் பொது அறிவு பாடப்பகுதியில் இருந்து 50 வினாக்கள் கேட்கப்படும். இதையடுத்து 2ம் தாளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்துள்ள பாடம் சார்ந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இத்தேர்வு கணினி வழித்தேர்வாக நடத்தப்படுகிறது.

இதையடுத்து தற்போது UGC-NET டிசம்பர் 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29ம் தேதி முதல் 2023 ஜனவரி 17ம் தேதி அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கான தேர்வானது பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

 Notification PDF

Application Link

Wednesday, December 28, 2022

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் IRCTC வேலைவாய்ப்பு



நிறுவனம் : Indian Railway Catering And Tourism Corporation Limited

பணியின் பெயர்: Computer Operator and Programming Assistant(Apprenticeship)

பணியிடங்கள்: 25

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.01.2023

விண்ணப்பிக்கும் முறை : Online


கல்வி தகுதி:

10ம் வகுப்பு, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 15 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்: 

ரூ.9,000/- வரை ஊதியம் (உதவித்தொகை) வழங்கப்டும் 

தேர்வு செய்யப்படும் முறை:  (Merit List)  

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் 2400+ காலிப்பணியிடங்கள்





மத்திய ரயில்வே வாரியம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது .இதில் Apprentice பணிக்கு என 2400க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.01.2023 இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம்: RRC
பணியின் பெயர்: Apprentice
பணியிடங்கள்: 2422
விண்ணப்பிக்கும் முறை: Online

வயது வரம்பு:

15 முதல் அதிகபட்சம் 24 வரை இருக்க வேண்டும்.மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC/ST பிரிவினருக்கு 05 ஆண்டும்,OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகளாகவும் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அல்லது அதற்கு சமமான (10+2 தேர்வு முறையின் கீழ்) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : Merit List

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.rrccr.com என்ற இணையதளம் மூலம் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.01.2023 இறுதி நாளுக்குள் Onlineல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


TN TRB வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியீடு.

 


தமிழக போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. நேர்காணல் மட்டுமே!!



சென்னையில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் காலியாக உள்ள கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை முகவர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் காப்பீட்டு ஆலோசகர்கள், சுயதொழில் செய்வோர் , நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள், உதவிக்குழு உறுப்பினர்கள், வேலை தேடும் இளைஞர்கள் போன்றோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதியுடையவர்கள் சுய விவரக்குறிப்பு, கல்வி தகுதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் டிச.30ம் தேதி சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.