Wednesday, July 29, 2020

அண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள்: பட்டியல் வெளியீடு


567072

மாநிலம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி, உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2020-21 ஆம் கல்வியாண்டில், மாணவர்களைப் பொறியியல் படிப்பில் சேர்ப்பதற்காக, அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

எப்படித் தெரிந்துகொள்வது?
https://www.annauniv.edu/cai/Options.php என்ற இணைய முகவரி மூலம் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்தும் இப்பட்டியலில் இடம் பெறாமல் உள்ள சில கல்லூரிகள், ஆகஸ்ட்15-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களை அளித்தால், அவற்றைச் சரிபார்த்து அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம்  தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment