Friday, April 24, 2020

'ஆன்லைன்' கல்வி சி.பி.எஸ்.இ., அழைப்பு!

During lockdown, CBSE schools connect with students online - The Hindu

மாணவர்களுக்கு, 'ஆன்லைனில்' பாடம் நடத்துவதற்கு தேவையான, வீடியோ பாடங்கள்மற்றும் குறிப்புகளை, தானமாக வழங்குமாறு, கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவனங்களுக்கு, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவிப்பு:

ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு, 'தீக் ஷா' என்ற செயலியை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி வழியாக, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்துவதற்கு, வீடியோ பாடங்கள், வினா வங்கிகள், குறிப்புகள் என, பல்வேறு அம்சங்களை சேர்க்க வேண்டியுள்ளது.

எனவே, கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர், இதில் பங்கெடுக்க வேண்டும். கல்வி தானம் என்ற, 'வித்யா தான்' திட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் இணையுமாறு, அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment