Monday, February 11, 2019

பிப்ரவரி 07, நடப்பு நிகழ்வுகள் 2019

நடப்பு நிகழ்வுகள்2019 க்கான பட முடிவு

உலக செய்திகள்

1. உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க கருவூலத் துறையின் மூத்த அதிகாரி டேவிட் மல்பாஸ் ((David Malpass)) பெயரை அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.

2. நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு(NATO – North Atlantic Treaty Organization) அமைப்பு உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் பொருட்டு லண்டனில் டிசம்பர் மாதத்தில் சிறப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

தேசிய செய்திகள்

1. எல் அண்ட் டி(L and T) நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அனில் மணிபாய் நாயக்(குஜராத்) 52 ஆண்டு பணிக்காலத்தில் எடுக்காத விடுமுறை நாட்களுக்கு உரிய ஊதியமாக 19 கோடி ரூபாயை பெற்றுள்ளார்.

2. பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றியோர்க்கு தமிழக அரசால் வழங்கப்படும் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதானது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரக்சனா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

3. உலக வங்கி நிதியுதவியுடன் தமிழகத்தில் 2 ஆயிரத்து 685 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சுகாதார சீரமைப்புத் திட்டங்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளன.

4. திருடப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை கண்டறிவதற்காக “DIGICOP” என்ற மொபைல் செயலியை சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

5. மனிதர்களுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘கிளிபோசேட்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு கேரள அரசு முழு தடை விதித்துள்ளது.
தேசிய அளவில் "ராஷ்ட்ரீய காமதேனு ஆயோக்" என்ற பெயரில் பசு ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

6. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 2019 ஆம் ஆண்டிற்கான ஆசிய எல்பிஜி உச்சிமாநாடு புது தில்லியில் தொடங்கி வைத்தார்.

7. ஏர் இந்தியா சி.எம்.டி. பிரதீப் சிங் கரோலா சிவில் விமானதுறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

1. இதயத்தின் இயக்க சக்தியைக் கொண்டே பேஸ்மேக்கர் போன்ற உயிர் காக்கும் கருவிகளை ரீசார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

2. ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை தங்கள் வயதை விட இளமையோடு இருப்பதாக அமெரிக்க ஆய்விதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

வர்த்தக செய்திகள்
1. ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை பிரிவுக்கு புதிய துணைத் தலைவராக ஏஞ்சலா ஆரண்ட்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment