Sunday, January 27, 2019

நவோதயா பள்ளிகளில் வேலைவாய்ப்பு

நவோதயா பள்ளி க்கான பட முடிவு

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா பள்ளியில் நிரப்பப்பட உள்ள 251 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து பிப்ரவரி 14க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 251

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Principal (Group-A) - 25
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.78800 - 2,09,200
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1500

பணி: Assistant Commissioner (Administration) (Group-A) - 03
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ..67,700 - 2,08,700
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1500

பணி: Assistant (Group-C) - 02
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
விண்ணப்பக் கட்டணம்: ரூ.800

பணி: Computer Operator (Group-C) - 03
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
விண்ணப்பக் கட்டணம்: ரூ.800

Post Graduate Teachers (PGTs) (Group-B) 
பணி: Biology - 16
பணி: Chemistry - 25
பணி: Commerce - 21
பணி: Economics - 37
பணி: Geography - 25
பணி: Hindi - 11
பணி: History - 21
பணி: Maths - 17
பணி: Physics - 34
பணி: IT - 11

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. கட்டணங்களை ஆன்லைன் மற்றும் வங்கி அட்டைகள் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: nvshq.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2019

விவரங்கள் அறிய Click Here

தில்லி பல்கலைக்கழத்தில் உதவியாளர் வேலை

தில்லி பல்கலைக்கழகத்தில் க்கான பட முடிவு

தில்லி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 73 நேர்முக உதவியாளர், சுருக்கெழுத்தர், அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 73 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: நேர்முக உதவியாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

பணி: சுருக்கெழுத்தர் - 07
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

பணி: இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் - 44 
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
பணி: அலுவலக உதவியாளர் (எம்டிஎஸ்) - 20 

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் ஆன்லைனில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி:  பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, ஐடிஐ மற்றும் தட்டச்சு, சுருக்கெழுத்து முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்:  பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.jnu.ac.in/career என்ற இணையதள்ததின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2019

விவரங்கள் அறிய Click Here

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை!

சென்னை ரயில் பெட்டி க்கான பட முடிவு

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ரயில் பெட்டி தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 220 தொழில் பழகுநர் பயிற்சிக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 220 
I. Category – I Graduate Apprentices:
1. Electrical & Electronics Engineering - 30
2. Mechanical Engineering - 70

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 வழங்கப்படும். 

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

தகுதி: 
பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

II. Category II Technician (Diploma) Apprentices:
1. Electrical & Electronics Engineering - 40
2. Mechanical Engineering - 80

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3542 வழங்கப்படும். 

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு 

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ, டிகிரி மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.boatsrp.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2019

விவரங்கள் அறிய Click Here

Friday, January 25, 2019

இந்திய விமான நிலையத்தில் வேலை!

தொடர்புடைய படம்

மத்திய அரசுப் பணிகளில் ஒன்றான இந்திய விமான நிலை ஆணையத்தில் காலியாக உள்ள ஐடிஐ அப்ரண்டிஸ் உள்ளிட்ட பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு ஐடிஐ பயின்று, பணியில் முன் அனுபவம் இல்லாதவர்களும் கூட விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய விமான நிலை ஆணையம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் பணியிட விபரம்:-
ஐடிஐ அப்ரண்டிஸ் : 80
டிப்ளமோ அப்ரண்டிஸ் : 59
பட்டதாரி பயிற்சி : 93

மொத்த காலிப் பணியிடம் : 232

கல்வித் தகுதி :

ஐடிஐ அப்ரண்டிஸ் : ஐடிஐ

டிப்ளமோ அப்ரண்டிஸ் : டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங், டிப்ளமோ எலக்ட்ரல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்

பட்டதாரி பயிற்சி : பி.காம், எல்எல்பி, பி.இ, பி.டெக்

முன் அனுபவம் : தேவை இல்லை

ஊதியம் :-
ஐடிஐ அப்ரண்டிஸ் : ரூ. 9000
டிப்ளமோ அப்ரண்டிஸ் : ரூ. 12,000
பட்டதாரி பயிற்சி : ரூ. 15000

வயது வரம்பு : 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aai.aero என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அதிகாரப் பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு ClickHere

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை க்கான பட முடிவு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள 70 குரூப் பி, சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Group B & Group C
காலியிடங்கள்: 70

பணி: Junior Hindi Translator - 03
தகுதி: ஹிந்தி, ஆங்கிலம் பாடப்பிரிவில் ஆங்கிலம், ஹிந்தியை ஒரு பாடமாகக் கொண்டு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Technical Assistant(Nuclear Medicine) - 02
தகுதி: Physics, Chemistry,Microbiology, Life Sciecnce போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Technical Assistant(Urology) - 01
தகுதி: Medical Radiation Technology, Allied Health Science in Urology பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் 35,400

பணி: Nursing Officer - 06
தகுதி: Nursing பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Stenographer Grade-II - 03
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடத்திற்கு கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.25,500

பணி: MTS-Cobbler - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 

பொதுப்பிரிவினர் மற்றும் பொதுப்பிரிவினரை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர், பிசி, ஓபிசி, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.1500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,200 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்கும் முறை: 

www.jipmer.pusucheery.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.02.2019

விவரங்கள் அறிய Click Here


வனக்காப்பாளர் பணி: இணையவழித் தேர்வு முடிவுகள் அறிய

பொறியியல் பட்டதாரிகளுக்கு உதவி பொறியாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!


தில்லி மேம்பாட்டு ஆணையத்தில் உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant Executive Engineer(Civil)
காலியிடங்கள்: 11

பணி: Assistant Executive Engineer (EEE, MEch)
காலியிடங்கள்: 03

வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சிவில், இஇஇ, மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ததியானவர்கள் GATE-2019 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, GATE -2019 தேர்வில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 

www.dda.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2019

விவரங்கள் அறிய Click Here

வரலாறு படித்தவர்களுக்கு வரலாற்று ஆராய்ச்சி மையத்தில் வேலை


Indian Council of Historical மையத்தில் நிரப்பப்பட உள்ள Post Doctroal Fellowship பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Post Doctoral Fellowship

காலியிடங்கள்: 10 

தகுதி: 

வரலாறு அல்லது வரலாற்று ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றிருக வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

வரலாற்று ஆராய்ச்சி குறித்து குறைந்தது 30 நிமிடங்களில் உரையாற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 

ரூ.300. இதனை தில்லியில் மாற்றத்தக்க வகையில் The DDO, ICHRவ என்ற பெயருக்கு டிடி ஆக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்கும் முறை: 

www.ichr.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் சுய சான்று செய்யப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Member Secretary, 
Indian Council of Historical Research, 
No.35, Ferozoshah Road, 
New Delhi - 110 001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.03.2019

விவரங்கள் அறிய Click Here 

வனக் காப்பாளர் பணியிடங்கள்: ஜன.28-இல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

தமிழக வனத் துறை க்கான பட முடிவு

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதித் தேர்வு ஜனவரி 28 முதல் 30-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 300 வனவர், 726 வனக் காப்பாளர்கள், 152 ஓட்டுநர் உரிமத்துடன்கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 2.10 லட்சம் பேர் எழுதினர்.

இதில், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களின் விவரங்கள் வனத் துறையின் இணையதளத்தில் கடந்த திங்கள்கிழமை (ஜன. 21) வெளியிடப்பட்டன.

28-இல் சான்றிதழ் சரிபார்ப்பு: 

தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதித் தேர்வு சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் உள்ள ஏவி அரங்கில் ஜனவரி 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது. நாளொன்றுக்கு 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இவை நடத்தப்பட உள்ளன. தேர்வர்கள் தேவையான அனைத்துச் சான்றிதழ்களுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வர வேண்டும். மேலும், விவரங்கள் www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக வனத் துறை சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு

தொடர்புடைய படம்

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் நிரப்பப்பட உள்ள 60 உதவி சிஸ்டம் பொறியாளர் மற்றும் உதவி சிஸ்டம் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மொத்த காலியிடங்கள்: 60

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Assistant System Engineer
காலியிடங்கள்: 36

பணி: Assistant System Analyst
காலியிடங்கள்: 24

தகுதி: 

பொறியியல் துறையில் Computer Science and Engineering, Computer Engineering, Information Technology, Electronics and Communication Engineering, Electrical and Electronics Engineering போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழ் மொழி அறிவும் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 

01.07.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பிசி,எம்பிசி பிரிவு விண்ணப்பத்தாரர்கள் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பத்தாரர்கள் 35 வயத்திற்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

 எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பதிவுக் கட்டணம்:

ரூ.150. ஏற்கனவே, ஒரு முறை பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்தியவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை. தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்தினால் போதுமானது. கட்டணங்கள் வங்கியின் அட்டைகளை பயன்படுத்தியும், ஆன்லைன் மூலம் செலுத்தலாம். கட்டண சலுகைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு மையம்: 

சென்னை, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம்.

விண்ணப்பிக்கும் முறை:

www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2019

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 22.02.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.04.2019

விவரங்கள் அறிய Click Here

பி.ஆர்க். படிப்புக்கான நுழைவுத் தேர்வு:விண்ணப்பிக்கலாம்

nata exam க்கான பட முடிவு

பி.ஆர்க். (இளநிலை கட்டடவியல் பொறியியல்) படிப்பில் சேருவதற்கான நாடா (தேசிய கட்டடவியல் திறனறித் தேர்வு) நுழைவுத் தேர்வுக்கு வியாழக்கிழமை (ஜன.24) முதல் விண்ணப்பிக்கலாம் என இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.

பி.ஆர்க். படிப்பில் சேர நாடா நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்தத் தேர்வை இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் நடத்தி வருகிறது. இப்போது, 2019 ஆம் ஆண்டுக்கான நாடா தேர்வை அறிவித்துள்ள கவுன்சில், ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு நடத்தப்படும் என்ற புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2019 ஆம் ஆண்டுக்கான முதல் நாடா தேர்வு ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு வியாழக்கிழமை முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைப் பதிவு செய்ய மார்ச் 11 கடைசி நாளாகும். தேர்வறை நுழைவுச் சீட்டை ஏப்ரல் 14 முதல் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு முடிவுகள் மே 3 ஆம் தேதி வெளியிடப்படும்.

இரண்டாவது தேர்வானது ஜூலை 7 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கும் ஜனவரி 24 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைப் பதிவு செய்ய ஜூன் 12 கடைசி நாளாகும். தேர்வறை நுழைவுச் சீட்டை ஜூன் 24 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு முடிவுகள் ஜூலை 21 ஆம் தேதி வெளியிடப்படும்.

தேர்வு மையங்கள்: 

தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர் ஆகிய 6 நகரங்களில் இந்தத் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

கட்டணம்: 

தேர்வுக்கான கட்டணம் ரூ. 1,800. இரண்டு முறையும் தேர்வெழுத விரும்புபவர்கள் ரூ. 3,500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ரூ. 1,500 செலுத்தினால் போதுமானது. இரண்டு முறையும் எழுத விரும்பும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ. 2,800 செலுத்தவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு Click Here

Saturday, January 19, 2019

Indian Oil Corporation Limited Recruitment 2019 (420 Apprentice Posts)

தொடர்புடைய படம்

Organization Name
Indian Oil Corporation Limited

Job Category
Central Govt Apprentice Training 

No. of Posts
420 Vacancies

Name of the Posts
Trade Apprentice, 
Technician Apprentice & Various Posts

Qualification 
ITI .,Diploma

Job Location
Tamil Nadu & Puducherry, 
Karnataka, Kerala, 
Telangana, Andhra Pradesh

Selection Procedure 
Written Exam, Interview

Apply Mode 
Online

Official Website

Starting Date
18.01.2019

Last Date 
10.02.2019

IOCL Apprentice Official Notification & Application Link
Official Website  Page 
 Official Notification PDF 
 Online Application Form 

இந்திய ரிசர்வ் வங்கியில் பொறியாளர் பணியிடங்களுகாகன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இந்திய ரிசர்வ் வங்கி க்கான பட முடிவு

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 24 இளநிலை பொறியாளர் பணியிடங்களுகாகன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்து பொறியியல் துறையில், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்களிடம் இருந்து வரும் 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 24

பதவி: Junior Engineer (JE) (Civil) - 15
பதவி: Junior Engineer (JE) (Electrical) - 09

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் போன்ற துறைகளில் 65 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்தவர்கள் 2 ஆண்டுகளும், டிகிரி முடித்தவர்கள் 1 ஆண்டும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. மற்ற பிரிவினருக்கு ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2019

விவரங்கள் அறிய Click Here

ஹோட்டல் மேலாண்மை படிப்புக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசி நாள்

தொடர்புடைய படம்

பி.எஸ்சி. ஹோட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் மாதம் 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தேசிய அளவில் நடத்தப்படும் ஜே.இ.இ., நீட், நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதுபோல தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்ப கவுன்சிலின் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பி.எஸ்சி. விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகப் படிப்புக்கான என்.சி.ஹெச்.எம். ஜே.இ.இ.-2019 தேர்வையும் என்டிஏ நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எப்போது?: 

இந்தத் தேர்வானது ஏப்ரல் 27-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசி நாளாகும். தேர்வுக் கட்டணம் செலுத்த மார்ச் 16 கடைசி நாளாகும்.

இணையதள முகவரி: 

இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கும், விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கும் www.ntanchm.nic.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

பிளஸ் 1, பிளஸ் 2: பிப். 6 முதல் செய்முறை தேர்வு

பிளஸ் 1, பிளஸ் 2:  செய்முறை தேர்வு க்கான பட முடிவு

தமிழகத்தில் பிப். 6-ஆம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகளை நடத்துமாறு பள்ளிகளுக்கு தேர்வுத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

மாநில பாடத் திட்டத்தில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் மார்ச் மாதம் பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதில் தமிழகம் முழுவதும் 25 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மட்டும் 16 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதவுள்ளனர். அவர்களுக்கான, செய்முறைத் தேர்வு பயிற்சிகள் தொடங்கியுள்ளன. 

பயிற்சி வகுப்புகள் முடியும் நிலையில் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில், பொது தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி அக மதிப்பீடு மதிப்பெண் குறிப்பிட வேண்டும். மாணவர்களின் வருகைப் பதிவு, செயல்பாடுகள் அடிப்படையில், இந்த மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று வரும் பிப். 6-இல் செய்முறை தேர்வுகளை தொடங்க வேண்டும்.

இந்தத் தேர்வுகளை, எந்த குளறுபடியும் இல்லாமல் வினாத்தாள் தயாரித்து முறைகேடுகளின்றி நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுவை பல்கலை.யில் எம்.பி.ஏ. பன்னாட்டு வணிகவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை பல்கலைக்கழகத்தில் க்கான பட முடிவு

புதுவை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பன்னாட்டு வணிகவியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை. நிர்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து பல்கலை. நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

புதுவைப் பல்கலை.யில் பன்னாட்டு வணிகவியல் பாடத்தில் எம்.பி.ஏ. வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகள் அடிப்படையிலான இந்தப் படிப்பில் பன்னாட்டு நிதி மேலாண்மை, கலாசார மேலாண்மை, மனித வளம், பன்னாட்டு அளவிலான சர்வதேச சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு பாடங்கள் நடத்தப்படும்.

இந்தப் பாடப் பிரிவில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்ஸி. (கணிதம், கணினி அறிவியல், புள்ளி விவரங்கள்), பி.டெக். உள்ளிட்ட இளநிலைப் பட்டங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் பட்டப் படிப்பை முடித்திருந்தாலே போதுமானது.  மாணவர்கள் பொதுச் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வில் (கேட் -2018) பெற்ற மதிப்பெண்களுடன் இணைத்து வருகிற 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

தகுதியுள்ள மாணவர்கள் வருகிற மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். வெளிநாடு வாழ் இந்தியவர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும். எனினும், இந்தத் தகுதியின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மத்திய அரசின் இந்திய கலாசார துறை, மனித வள மேம்பாட்டுத் துறை மூலம் தகுந்த ஆவணங்களுடன் நேரிடையாக துறைத் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு புதுவைப் பல்கலை.யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் (WWW.pondiuni.edu.in) பார்த்து அறிந்து கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, January 16, 2019

BOSCH Recruitment for Engineer – Development (Instrumentation) Job Pos

Related image

Org Name
 BOSCH

Job Location 
 Bengalure, Bengalure, KA

Name of the Post  
 Development (Instrumentation)

Qualifications
Diploma in Electronics & Communication / Electrical & Electronics

Job Type 
Private Company

Apply Mode
 Online

How to apply BOSCH Recruitment

Tuesday, January 15, 2019

உதவித்தொகையுடன் கோடைகால பயிற்சி வகுப்பு!

be கோடைகால பயிற்சி க்கான பட முடிவு

அட்மிஷன்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அகாடமி ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இன்னோவேட்டிவ் ரிசர்ச் (AcSIR) நிறுவனம் 2011ம் ஆண்டு நிறுவப்பட்டது. சுமார் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களும் மற்றும் 37 தேசிய ஆய்வகங்களும் கொண்ட இந்நிறுவனத்தில் 2019ம் ஆண்டுக்கான கோடைகாலப் பயிற்சி வகுப்பு அறிவிப்பு (Dr. APJ Abdulkalam Summer Training Program) வெளியாகியுள்ளது.

எஞ்சினியரிங் / டெக்னாலஜி பட்டம் பயிலும் மாணவர்கள், இந்தியாவின் முன்னணி அறிவியலாளர்களுடன் இணைந்து CSIR-ன் இந்தியா முழுவதும் உள்ள ஆய்வகங்களில் பல்வேறு வகையான புத்தாக்க ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டது இப்பயிற்சி வகுப்பு. இது உண்டு உறைவிடப் பயிற்சித் திட்டமாகும்.

பயிற்சி வகுப்பு 

ஒவ்வொரு ஆண்டின் கோடைகாலத்திலும் சுமார் 20 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.25,000 வரையிலான உதவித்தொகை வழங்கப்பட்டு ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட ஏதேனும் இரண்டு மாதங்கள் பயிற்சிக் காலமாக அனுசரிக்கப்படுகிறது. 

கல்வித் தகுதி

GPA 8.0 on a scale of 10 OR GPA 7.0 on a scale of 10 for CFTIs என்ற விகிதாச்சாரத்துடன் மூன்றாம் ஆண்டு B.E / B.Tech தேர்ச்சி அல்லது அதே விகிதாச்சாரத்தில் முதலாம் ஆண்டு M.Sc / M.E / M.Tech பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு அனுசரிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://acsir.res.in என்ற இணையதளம் சென்று முழுமையான விவரங்களைப் படித்துவிட்டு, ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித் தகுதியில் எடுத்த மதிப்பெண்கள், தேர்ந்தெடுக்கும் ஆய்வுத் துறை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அந்தந்த துறைக்கு ஏற்ப ஆய்வுக்கூடங்களில் தங்கிப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 31.1.2019

சென்னை பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் வேலை

சென்னை பல்கலைக்கழகத்தில் க்கான பட முடிவு

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 2 திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 02 
பதவி: Project Associate - 01
பதவி: Project Assistant - 02

தகுதி: Physics, Material Science, Nanoscience துறைகளில் எம்.எஸ்சி முடித்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் Project Associate பணிக்கும், Physics, Chemistry,Material Science, Nanoscience போன்ற துறைகளில் எம்.எஸ்சி முடித்தவர்கள் Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி
Professor S.Balakumar, Director, National Centre for Nanoscience and Nanotechnology, University Of Madras, Guindy Campus, Chennai 600 025. Email: baladuga@yahoo.com

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.01.2019

விபரங்கள் அறிய Click Here

பி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை

indian navy க்கான பட முடிவு

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 102 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 102

பதவி: Commission Officer 

தகுதி: பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: விண்ணப்பதாரர் 02.01.1995 மற்றும் 01.07.2000 ஆகிய தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.02.2019

Monday, January 14, 2019

ஈரோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நீதித்துறை க்கான பட முடிவு

ஈரோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8 ஆம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: துப்புரவு பணியாளர்
காலியிடங்கள்: 10 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

பதவி: சுகாதார ஊழியர்
காலியிடங்கள்: 05
தகுதி: எழுத் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பதவி: இரவுக் காவலர்
காலியிடங்கள்: 17
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

பதவி: மசால்சி
காலியிடங்கள்: 02
சம்பளம்: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30க்குள்ளும், பிசி பிரிவினர் 32குள்ளும், எஸ்சி, எஸ்டி மற்றும் விதவைகள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2019 மாலை 5.45க்குள் வந்து சேர வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஈரோடு.

விவரங்கள் அறிய  Click Here

பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் வேலை

நீதித்துறை க்கான பட முடிவு

பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 62

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

1.Computer Operator Temporary - 06
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

2. Examiner - 02 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

3. Reader - 01 
4. Senior Bailiff - 01 
5. Driver - 01
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

6. Junior Bailiff - 03 
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

7. Xerox Machine Operator - 03
சம்பளம்: மாதம் ரூ. 16,600 - 52,400

8. Office Assistant - 24 
9. Night Watchman - 07
10. Masalchi - 09 
11. Scavenger - 01
12. Sweeper - 03 
13. Sanitary Worker - 01
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: கணினி துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஏ, பி.காம், பி.எஸ்சி முடித்தவர்கள் டிப்ளமோ கம்பியூட்டர் அப்ளிகேஷன் முடித்தவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், ஜெராக்ஸ் மெஷின் இயக்குதல் வகுப்பு முடித்து, 6 மாதம் அனுபவம் பெற்றவர்கள், தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்கள் அந்தந்த தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: பொது பிரிவினர் 30க்குள்ளும், பிசி, எம்பிசி பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி,எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள்ளம் இருக்க வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள தகுதிக்கும் அதிகமான தகுதி பெற்றிருப்பவர்களுக்கு வயதுவரம்பில்லை. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/perambalur என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர் மாவட்டம் - 621 212

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.01.2019

விவரங்கள் அறிய Click Here

பொறியியல் பட்டதாரிகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்!



மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் (பிஎஸ்என்எல்) நிரப்பப்பட உள்ள 300 மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Management Trainee (MT) (Telecom Operations)

மொத்த காலியிடங்கள்: 300

வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், கணனி, ஐடி, எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்து எம்.டெக், எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் Assessment Process தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

On-line Assessment Process தேர்வு நடைபெறும் தேதி: 17.03.2019

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.2,200. மற்ற பிரிவினருக்கு ரூ.1100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.01.2019

விவரங்கள் அறிய Click Here

Sunday, January 6, 2019

ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு!

ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் க்கான பட முடிவு

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (ஆர்ஆர்பி) ரயில்வேத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 13,487

பணி மற்றும் பணியிடம்:-
இளநிலை பொறியாளர் : 12844
இளநிலை பொறியாளர் : (தகவல் தொழில்நுட்பம்) 29
டிப்போட் பொருட்கள் கண்காணிப்பாளர் : 227
இரசாயன மற்றும் மெட்டாலர்ஜிகல் உதவியாளர் : 387

தமிழகத்திற்கான காலியிடங்கள் : 1183

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே கல்வித் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இதற்கான முழுத் தகவல் உள்ளது.

வயது வரம்பு : 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பக் கட்டணம் :-
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2019 ஜனவரி 02 முதல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 31

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click Here

விண்ணப்பப் படிவம் பெற : Click Here

TNPSC Group 1 தேர்வு அறிவிப்பு

தொடர்புடைய படம்

நிர்வாகம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 

காலிப் பணியிடம் : 139

பணி மற்றும் காலிப் பணியிடம் :-
உடல் பயிற்சி அதிகாரி - 06
மாவட்ட அதிகாரி - 02
மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி - 08
உதவி இயக்குநர் - 15
மாவட்ட பதிவாளர் - 07
உதவி ஆணையாளர் - 11
துணை கண்காணிப்பாளர் - 56
துணை ஆட்சியாளர் - 27
துணை பதிவாளர் - 13

கல்வித் தகுதி:-
உடற்கல்வி பிரிவில் டிப்ளமோ.,ஏதேனும் ஓர் துறையில் பட்டம்

வயது வரம்பு :
21 முதல் 38 வயது வரை

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக www.tnpsc.gov.in என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150

தேர்வுக் கட்டணம் : ரூ.150

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 31

விபரங்களை அறிய Click Here

Perambalur District Court Recruitment 2019 (62 Office Assistant Posts)

Perambalur District Court க்கான பட முடிவு

Organization Name:
Perambalur District Court
Job Category:
Tamilnadu Govt Jobs
No. of Posts:
62 Vacancies
Name of the Posts:
Office Assistant, Computer Operator, Examiner, Reader, Senior Bailiff, Driver & Various Posts
Job Location:
Perambalur
Selection Procedure:
Written Exam, Interview
Application Apply Mode:
Online
Official Website:
Starting Date:
28.12.2018
Last Date:
21.01.2019
Perambalur District Court Official Notification & Application Link:
Official Website Career Page
Notification & Application Form PDF