Monday, December 3, 2018

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி’ கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி க்கான பட முடிவு

மத்திய ஜவுளி துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி’ கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்: பி.டெஸ்., பி.எப்டெக்., எம்.எப்.எம்., எம்.டெஸ்., எம்.எப்டெக்.,

தகுதிகள்: இளநிலை படிப்பிற்கு 12ம் வகுப்பு முடித்தவர்களாகவும், முதுநிலை படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., /மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சேர்க்கை சதவீதத்தில் இடஒதிக்கீடு வழங்கப்படும்.

வயது வரம்பு: இளநிலை படிப்பிற்கு 23 வயதிற்கு குறைந்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். முதுநிலை படிப்பிற்கு வயது வரம்பு இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை என்.ஐ.எப்.டி.,யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

தேர்வு முறை: நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். பி.டெஸ்., படிப்பிற்கு கிரியேடிவிட்டி எபிலிட்டி டெஸ்ட் (சி.ஏ.டி.,), பி.எப்டெக்., எம்.எப்.எம்., எம்.எப்டெக்., ஆகிய படிப்புகளுக்கு ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் (ஜி.ஏ.டி.,), எம்.டெஸ்., படிப்பிற்கு சி.ஏ.டி., மற்றும் ஜி.ஏ.டி., ஆகிய இரு தேர்வுகளையும் மாணவர்கள் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளும் எழுத்துத் தேர்வாகவே நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 28

தேர்வு நாள்: ஜனவரி 20

விபரங்களுக்கு: Click Here

No comments:

Post a Comment