Sunday, August 5, 2018

மத்திய அரசு கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அக்.31 கடைசி

மத்திய அரசு கல்வி உதவித் தொகை க்கான பட முடிவு

மத்திய அரசு கல்வி உதவித் தொகையைப் பெற பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி தேதியாகும்.

இது தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்ட அறிவிப்பு: 2018-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு கல்வி உதவித் தொகையைப் பெற விரும்பும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள், அதற்கான விண்ணப்பத்தை http://scholarship.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதே போன்று கல்வி உதவித் தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தையும் 2015, 2016, 2017-ஆம் ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment