Monday, July 23, 2018

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017 | PUBLICATION OF CERTIFICATE OF MARKS | இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்

Image result for trb

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இடைநிலை ஆசிரியர்களுக் கான தகுதித்தேர்வு (தாள்-1) கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி நடத்தப்பட்டது. அத் தேர்வை 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 பேர் எழுதினர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப் பெண் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. தகுதியுடைய இடைநிலை ஆசிரியர்கள் இந்த இணைய தளத்தில் தங்கள் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப் பிட்டு மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு ஒரு மாதம் காலஅவகாசம் அளிக்கப் படுகிறது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044-28272455, 7373008144, 7373008134 இந்த ஹெல்ப்லைன் எண்களைத் தொடர்புகொள்ளலாம். தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் செல்லத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது.

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017
PUBLICATION OF CERTIFICATE OF MARKS

Dated: 21-07-2018

Chairman

No comments:

Post a Comment