Tuesday, July 31, 2018

TNPSC தமிழ்நாடு தோட்டக்கலை உதவியாளர் அதிகாரி தேர்வுகான Admit Card வெளியீடு


Exam Date: 11.08.2018 FN & AN.

தமிழக வனத்துறையிலும் ஆன்லைன் தேர்வு

தமிழக வனத்துறை tnpsc க்கான பட முடிவு

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள, வனச்சரகர் மற்றும் வனவர் பணியிடங்களை நிரப்ப, ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்பட உள்ளது. வனத்துறையில் காலியாக உள்ள, வனச்சரகர், வனவர், வனக்காவலர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வனத்துறை சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தான் தேர்வு நடத்தும். தற்போது, வனத்துறையில் அதிக பணியிடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், எழுத்து தேர்வு நடத்துவதில், காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளதால், ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த, வனத்துறை சீருடை பணியாளர் தேர்வு குழுமம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பொறுப்பு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முகமை, ஆன்லைன் முறையில் தேர்வு கட்டமைப்பை ஏற்படுத்தும், நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. இதில், விண்ணப்பிக்கும் நிறுவனங்களில், தகுதியான ஒன்று, வரும், 13ல் தேர்வு செய்யப்பட உள்ளது.

MSU Tirunelveli Recruitment 2018 (63 Junior Assistant Posts)

Manonmaniam Sundaranar University Tirunelveli க்கான பட முடிவு

Organization Name
 Manonmaniam Sundaranar University Tirunelveli 

Employment Category
 Tamilnadu Govt Jobs

Total No. of Vacancies
 63

Job Location
 Tirunelveli

Name of the Post & No of Vacancies
1. Junior Assistant - 52 Posts
2. Technical Assistant (Dept. of Geo-tech) - 01 Post
3. Office Assistant - 03 Posts
4. Driver - 03 Post
5. Electrician - 01 Post
6. Lab Technician (Dept. of Chemistry) - 02 Posts
7. Junior Engineer (Civil) - 01 Post

Selection Procedure 
written Exam, Interview

Last date for Submission of Application17.08.2018

Official Notification & Application 
MSU Tirunelveli Official Website
MSU Tirunelveli Official Notification PDF
MSU Tirunelveli Eligibility Norms PDF
MSU Tirunelveli General Instructions PDF
MSU Tirunelveli Application Form PDF
MSU Tirunelveli Applicant Data Sheet PDF

Coimbatore District Court Recruitment 2018 Computer Operator, Xerox Machine Operator post

Coimbatore District Court க்கான பட முடிவு
Organization Name
 Coimbatore District Court

Employment Category
 Tamilnadu Govt Jobs

Total No. of Vacancies
16

Job Location
 Coimbatore

Name of the Post 
Computer Operator 
 Xerox Machine Operator 

Qualification
10th Bachelor’s degree, B.A., or B.Sc., or B.Com

Selection Procedure
 Short Listing, interview

. Last date for Submission of Application  20.08.2018

 Application & Official Notification Links
Official Website Page
 Official Notification PDF
 Online Application Form

Indian Bank Recruitment 2018 (417 PO Posts)

Indian Bank க்கான பட முடிவு

Organization Name
 Indian Bank

Employment Category
Central Govt Jobs

Total No. of Vacancies 
417

Job Location
 All Over India

Name of the Post 
 Probationary Officer (PO)

Qualification
A Degree

Selection Procedure 
 Preliminary Examination (objective type),
 Main Examination & Interview

Application Fee
For General/OBC- Rs.600/-
 (ST/SC/ PWD)  - Rs.100/-

Last date for Submission of Application: 27.08.2018

Indian Bank Online Application & Official Notification
Official Notification PDF
 Online Application Form

CTET Exam- க்குஇன்று முதல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு செய்யலாம்

தொடர்புடைய படம்

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கான,மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, இன்று முதல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா போன்ற, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசு நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்கான அறிவிப்பை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.இதன்படி, www.ctet.nic.in என்ற இணையதளத்தில், இன்று முதல், ஆக., 27 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மொத்தம், 92 நகரங்களில், 20 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது

WhatsApp Group Video Call அறிமுகம்

குரூப் வீடியோ- ஆடியோ காலிங் வசதியைஅறிமுகம் செய்தது வாட்ஸ் அப் நிறுவனம்

குரூப் வீடியோ- ஆடியோ காலிங் வசதியை அறிமுகம் செய்தது வாட்ஸ் அப் நிறுவனம்


குரூப் வீடியோ- ஆடியோ காலிங் வசதியை அறிமுகம் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

குறுந்தகவல்களை பகிர பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான வாட்ஸ் அப், தங்கள் பயனாளர்களை கவர அவ்வப்போது புதியப்புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

தகவல்களை டெக்ஸ்ட் மூலமாக மட்டும் அல்லாது, வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் ஆகிய சேவைகளையும் வாட்ஸ் அப் வழங்கி வருகிறது. இதன் மேம்பட்ட ஒரு அம்சமாக, குரூப் வீடியோ மற்றும் ஆடியோ காலிங் சேவையை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பரிசோதனை அளவில் இருந்த இந்த வசதி முதல் முறையாக, பயனாளர்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வரப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு, மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்தும் பயனாளர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே நேரத்தில், அதிகபட்சமாக நான்கு பேருடன் மட்டுமே வாய்ஸ் மூலமாகவும் வீடியோ மூலமாகவும் பேச முடியும் என்பது கவனிக்கத்தக்கது. டெக்ஸ்ட் மெசேஞ் போல, வீடியோ மற்றும் ஆடியோ காலிங் வசதியும் என்கிரிப்ட் செய்யப்பட்ட ஒன்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 8-ம் தேதி நடந்த UGC NET தேர்வு முடிவுகள் வெளியீடு

cbse net க்கான பட முடிவு

2018 ஜூலை 8-ம் தேதி நடந்த UGC NET தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது. முன்னதாக கடந்த ஜூலை 27-ஆம் நாள் இந்த தேர்வின் வினாக்களுக்கான விடைகள் வெளியாகி சர்சைகளை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 8,59,498 பேர் எழுதிய தேர்வில் 55,872 பேர் உதவிப்பேராசிரியர் பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

பி.ஆர்க்., மாணவர் சேர்க்கை ஆக., 11ல் நுழைவு தேர்வு

தொடர்புடைய படம்

'பி.ஆர்க்., படிப்பில்,நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்வதற்கான, தமிழக அரசின் திறனறி நுழைவு தேர்வு, வரும், 11ல் நடத்தப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, மாணவர்களை சேர்க்க, தனியாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க, 'நாட்டா' என்ற, தேசிய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழக மாணவர்களுக்கு, நாட்டா நுழைவு தேர்வு குறித்து, அதிக விழிப்புணர்வு இல்லாததால், பெரும்பாலானவர்கள், அந்த தேர்வை எழுதாமல், பி.ஆர்க்., படிப்பில் சேர முற்படுகின்றனர். இது போன்ற, நாட்டா தேர்வு எழுதாத மாணவர்களுக்கு, கூடுதல் வாய்ப்பு அளிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில், திறனறி நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் மட்டும் சேரலாம். தமிழக அரசின் இந்த தேர்வு, 2017ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கான நுழைவு தேர்வு, வரும், 11ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, https://admissions.annauniv.edu/tanata18 என்ற இணையதளத்தில் நேற்று துவங்கியது. வரும், 6ம் தேதி வரை விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, 1,000; மற்ற மாணவர்களுக்கு, 2,000 ரூபாய் தேர்வு கட்டணம். தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும், 7ல் வழங்கப்படும்; தேர்வு முடிவு, 16ல் வெளியிடப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. தேர்வுக்கான விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

குரூப்-2 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு

தொடர்புடைய படம்

குரூப் 4 தேர்வை 17 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர்; நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான். ஆகஸ்ட் 30வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் ஓஎம்ஆர் சீட் தொடர்பாக எந்த பிரச்னையும் எழவில்லை. புதிய முறைகளின்படி குரூப் 4 தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் பேட்டி. மேலும் குரூப்-2 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்

இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வு : ஆக. 9-இல் சான்றிதழ் சரிபார்ப்பு

tnpsc க்கான பட முடிவு

இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஆகஸ்ட் 9-இல் நடத்தப்பட உள்ளது.

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலைப் பணி மற்றும் தொகுதி 8-ஏ-இல் அடங்கிய செயல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி 20-இல் நடைபெற்றது. அதில் 271 பேர் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விகிதாச்சாரம் மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்டோரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 9-ஆம் தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு முடிவு க்கான பட முடிவு

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகின்றன. இணையதளத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் பதிவு எண் பூர்த்தி செய்து தங்கள் மதிப்பெண்களை தெரிந்துக்கொள்ளலாம். 
தொடர்ந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை நாளை பிற்பகல் முதல் http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் முலம் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம்

குரூப் 4 க்கான பட முடிவு

குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுமன் ஆகியோர் கூறியதாவது, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவில் காலியாக இருந்த 9,351 இடங்களுக்கு நடந்த தேர்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 

இந்தத் தேர்வினை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். முதல்முறையாக, குரூப் 4 பிரிவுடன் கிராம நிர்வாக அலுவலர் தேர்வும் இணைத்தே நடத்தப்பட்டது. இதன் மூலம் டிஎன்பிஎஸ்சிக்கு ரூ.11 முதல் ரூ.12 கோடி மிச்சமானது. நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான்.

பிப்ரவரி மாதம் நடந்த குரூப் 4 தேர்வை எழுதிய 17 லட்சம் பேரில் சுமார் 14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதை விட 3 மடங்கு அதிகமான அதாவது 30 ஆயிரம் பேரை கலந்தாய்வுக்கு அழைப்போம்.

தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தகவல் அனுப்பப்படும், அவர்கள் தங்களது சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம், அவர்கள் சென்னை வருவது தவிர்க்கப்படும்.

சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும். 30ம் தேதி வரை இ-சேவை மையங்களில் செய்யலாம். அது முடிந்ததும் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கும். நாங்களே அதனை பதிவிறக்கம் செய்து சரிபார்ப்போம். அது முடிந்த பிறகு அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்று தெரிவித்தனர்.

Monday, July 30, 2018

COMBINED CIVIL SERVICES EXAMINATION - 4 (GROUP -IV) Result Published

tnpsc க்கான பட முடிவு

COMBINED CIVIL SERVICES EXAMINATION - 4    (GROUP -IV)
(Date of Written Examinatio
n:    11.02.2018 FN)
MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION


Server-1          |||          Server-2

Vidyarthi Vigyan Manthan - மாணவர்கள் அறிவியல் திறனறி தேர்வுக்கு செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

Vidyarthi Vigyan Manthan க்கான பட முடிவு

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான பிரசார் நிறுவனம், என்சிஇஆர்டியின் விபா நிறுவனம் ஆகியவை இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வு தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு நவம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் இணைய வழியில் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி, கணினி மூலம் தேர்வு எழுதலாம். ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம். தேர்வுக்கட்டணம் ரூ100 செலுத்த வேண்டும் செப்டம்பர் 30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்த தேர்வு எழுதலாம். 6 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடக்கும். மேற்கண்ட தேர்வு எழுத விரும்புவோர் www.vvm.org.in என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

Sunday, July 29, 2018

CPCL Recruitment 2018 142 Apprentice Posts

CPCL க்கான பட முடிவு

Organization Name
 Chennai Petroleum Corporation Limited (CPCL)

Employment Category
 Central Govt Apprentices Training

Total No. of Vacancies
 142

Job Location
Chennai

Qualification
10th, ITI, B.Sc, MBA, Any Degree

Last date for Submission of Application
 12.08.2018

CPCL Online Application & Official Notification Links
Official Notification
Online Application Form

DRDO Recruitment 2018 (494 STA ‘B’ Posts)

DRDO Recruitment 2018 க்கான பட முடிவு

Organization Name
Defence Research & Development Organisation (DRDO)

Employment Category
 Central Govt Jobs

Total No. of Vacancies
 494

Job Location
All Over India

Name of the Post
 Senior Technical Assistant 

Qualification
 Diploma, B.Sc

Selection Procedure 
 Tier-I, Tier-II Computer Based Test (CBT), 
Preliminary document verification

Application Fee:
For General/OBC - Rs.100/-
(women and SC/ST/PWD/ESM) - Nil

Important Dates 
1. Starting Date for Submission of Application: 04.08.2018
2. Last date for Submission of Application: 29.08.2018

DRDO Online Application & Official Notification Links
 Official Notification
 Click Here to Download
 Online Application Form

Saturday, July 28, 2018

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் க்கான பட முடிவு

டெல்கிவெரி நிறுவனத்தில் பிசினஸ் டெவலப்மெண்ட் (சேல்ஸ்) வாய்ப்பு
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் 4,000 ரூபாய் 
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 7
விபரங்களுக்கு: Click Here

ராயல் என்பீல்டு நிறுவனத்தில் ஹூயுமன் ரிசோஷர்ஸ் வாய்ப்பு
இடம்: சென்னை 
உதவித்தொகை: மாதம் 5,000 முதல் 8,000 ரூபாய் வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 2
விபரங்களுக்கு: Click Here

கேரட்லேண் டிரேடிங் நிறுவனத்தில் இன்பர்மேஷன் டெக்னாலஜி வாய்ப்பு
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் 6,000 ரூபாய் 
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 2
விபரங்களுக்கு: Click Here

University of Madras Recruitment 2018


CMFRI Recruitment for Trade Apprentices Job Post

CMFRI க்கான பட முடிவு

Org Name
 CMFRI

Efficiency 
National Trade Certificate (NTC)

Location 
Kochi

 Job Trade 
Apprentices Post

Selection Process
Interview

Last Date
20/08/2018
 Official Notification 

Click Here

Friday, July 27, 2018

Bhabha Atomic Research Centre Recruitment for Stipendiary Trainees

தொடர்புடைய படம்

Org Name 
Bhabha Atomic Research Centre

Qualification
 10th, 12th, ITI, Diploma, Degree

Job Location
 All Over India

No. of vacancies
 224 vacancies

Name of the Post 
Stipendiary Trainees 

Last Date
 20/08/2018
 Notification & Application
Notification 
Apply Job

RRB ALP Mock Test (Model Paper) – Railway Assistant Loco Pilot Practice Papers 2018

TRB - தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக் கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடு

trb க்கான பட முடிவு


 Direct Recruitment of Special Teachers 2012 - 2016 - CV list 

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Special Teachers 2012-2016
PUBLICATION OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION

Dated: 27-07-2018

Chairman

Tamil Nadu Agricultural University Recruitment 2018

Tamil Nadu Agricultural University க்கான பட முடிவு

Organization Name
Tamil Nadu Agricultural University (TNAU)

Employment Category
 Tamilnadu Govt Jobs

Total No. of Vacancies
 30

Job Location
Tamilnadu

Name of the Post 
Driver - 21 Posts
Junior Tractor Driver - 09 Posts

Qualification
 8th

Selection Procedure 
 Written Exam, Skill test (Driving) & Interview

Last date for Submission of Application
 10.08.2018

TNAU Online Application & Official Notification
Driver Official Notification PDF
TNAU Junior Tractor Driver Official Notification PDF
TNAU Online Application Form

IBPS Office Asst (Multipurpose) Admit Card Published

ibps க்கான பட முடிவு

Org Name
Institute of Banking Personnel Selection

Post Name
Office Asst (Multipurpose)

Exam Date
18.8.2018


Thursday, July 26, 2018

Wednesday, July 25, 2018

தபால்துறையில் போஸ்டல் ஏஜென்ட் பணி

Image result for தபால்துறையில்

தபால் துறையில் சேவைகளை துரிதப்படுத்தும் புது முயற்சியாக ஓ.பி.ஏ. எனப்படும் ‘அவுட்சோர்ஸ்டு போஸ்டல் ஏஜென்ட்’ பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க சென்னை அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வெளியில் இருந்தபடி தபால்துறைக்கான தபால்கள் மற்றும் பார்சல்களை பெறவும், வினியோகிக்கவும் இந்த ஏஜென்ட் பணிவாய்ப்பு வழி செய்கிறது.

குறிப்பிட்ட எடையை கையாளுவதற்கேற்ப விதிமுறைப்படி ஊதியம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த பணிக்கு பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட மாதிரியான சுய விவர பட்டியலுடன், தேவையான சான்றுகள் இணைத்து, அண்ணாசாலை தலைமை தபால் நிலைய முகவரிக்கு 31-7-2018-ந் தேதிக்குள் தபாலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் வாகனம் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பதுடன், கணினி அறிவு, ஸ்மார்ட்போன் மற்றும் இன்டெர்நெட் இணைப்பு பெற்றிருப்பது அவசியமாகும். நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். இது பற்றிய விவரங்களை 044-28520923 என்ற தொலைபேசி எண்ணிலும், doannaroadhpo.tn@indiapost.gov.in என்ற மெயில் முகவரியிலும் கேட்டுப் பெறலாம்.

To Join Whatsapp Job Alert

ராணுவ தொழில்நுட்ப பிரிவில் பட்டதாரிகள் சேர்ப்பு ஆண்-பெண் இருபாலரும் சேரலாம்

Image result for ராணுவ

ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கையின்படி தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது தொழில் நுட்ப பிரிவில் 52-வது சேர்க்கையின்படி ஆண்களும், 23-வது ேசர்க்கையின்படி பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள். எஸ்.எஸ்.சி. (டெக்) கோர்ஸ் காமென்சிங் ஏப்ரல் 2019 எனும் இந்த பயிற்சி சேர்க்கையில் மொத்தம் 191 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் பெண்களுக்கு 16 இடங்கள் உள்ளன. ஆண்களுக்கு 175 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உள்ள பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-4-2019-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 27 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். விதவைகள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

பி.இ., பி.டெக் பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. விண்ணப்பதாரர்கள் ஆண்-பெண் இருபாலரும் திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும். விதவைப் பெண்களுக்கு ஒன்றிரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தேர்வு செய்யும் முறை:

எஸ்.எஸ்.பி. அமைப்பின் மூலம் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்2 என இரு நிலை தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். படங்களை புரிந்து கொள்ளுதல், நுண்ணறிவுத் திறன், உடல் திறன் தேர்வு, கலந்துரையாடல், நேர்காணல், உளவியல் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் இதில் அடங்கும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் சேரலாம். மேலும் 18 நிலைகளில் பதவி உயர்வு பெறுவதுடன், 2½ லட்சம் ரூபாய் வரை சம்பள உயர்வும் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 9-8-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். விதவை பெண்கள் தேவையான சான்றுகளுடன், தபால் மூலம் 30-9-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விரிவான விவரங்களை Click Here

To Join Whatsapp Job Alert

டி.என்.பி.எஸ்.சி. ஆன்லைன் தேர்வு எப்படி நடைபெறும்?

Image result for ஆன்லைன் தேர்வு

தற்போது தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளும் இணையதளம் வழியே நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆன்லைன் தேர்வுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த வண்ணம் இருந்தாலும், தமிழக அரசு, ஆன்லைன் தேர்வுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை எப்போதோ கோரிவிட்டது. விரைவில் ஆன்லைன் வழித் தேர்வுகள் நடப்பது உறுதி என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. எந்த வகையில் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பில் விவரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு எப்படி நடைபெறுகிறது, மாணவர்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்...

  1. விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட இடங்களில் தேர்வு மையங்கள் உருவாக்கப்படும். ‘லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)’ மூலம் அந்த தேர்வு மையத்தில் உள்ள அனைத்து கணினிகளுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். அவை அனைத்து தேர்வு மையங்களுக்குமான பொதுவான சர்வர் கணினியுடன் இணைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும்.
  • வழக்கமான கொள்குறி வகை (ஆப்ஜெக்டிவ் டைப்) கேள்விகளே ஆன்லைன் தேர்விலும் இடம் பெறும். அதாவது வினாவும், அதன் கீழ் 4 விடைகளும் கொடுக்கப்பட்டு, சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும்.
  • ஒரு வினாவுக்கு விடையை தேர்வு செய்ததும், நெக்ஸ்ட் என்ற பொத்தான் வழியாக அடுத்த கேள்விக்குச் செல்லலாம்.
  • தேர்வு முடிந்ததும் இறுதியாக கருத்துப்படிவம் ஒன்றும் கொடுக்கப்படும், அதிலும் கணினி வழியாகவே பதில் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர்களின் சந்தேகங்கள், விளக்கங்களைப் பெறவும் ஆன்லைன் தேர்வு முறையில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக ‘சேலஞ்ச் விண்டோ’ என்ற திரையை விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிந்த 7 நாட்களுக்குள் பயன்படுத்தி முறையிடலாம்.

சிறப்புகள்

  • தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்பாக எப்படி தேர்வு எழுத வேண்டும் என்று பயிற்சி வழங்கப்படும் என்பதால் மாணவர்கள் குழப்பமின்றி தேர்வு எழுதலாம்.
  • ஆன்லைன் தேர்வை சுலபமாக்கவும், குறைகளை களையவும் முதலில் குறைந்த அளவில் விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் தேர்வில், பரிசோதனை முறையாக ஆன்லைன் தேர்வு நடை முறைப்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்படும்
  • ஆன்லைன் வழியே நடப்பதால் காப்பியடித்தல் உள்ளிட்ட தவறுகள் கட்டுப்படுத்தப்படும். ஒவ்வொருவருக்கும் கேள்விகள் குறிப்பிட்ட முறையில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் எந்த வகையிலும் காப்பியடிக்க முடியாது.
  • கணினி வழியே தேர்வுகள் நடப்பதால் தேர்வுத்தாளை திருத்துதல், விடைகளை வெளியிடுதல் ஆகியவற்றுக்கான நேரம் மிச்சமாகும். கணினி களால் உடனடியாக விடைகளை சரிபார்த்து முடிவுகளை அறிவிக்க முடியும்.
  • ஆன்லைன் தேர்வை நடத்திக் கொடுக்கும் அமைப்பாக தனியார் நிறுவனம் செயல்பட்டாலும், டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்
  • தேர்வு முடிந்ததுமே அனைத்து தகவல்களும் சர்வர் கணினிக்குச் சென்றுவிடும், பாதுகாப்பு மற்றும் நிர்வாக வசதிக்காக சில இடங்களில் நகல்களும் பராமரிக்கப்படும். ஆனால் தேர்வு நடந்த மையங்களிலும், வேறு எங்கும் வினாத்தாள் உள்ளிட்ட எந்த விவரங்களும் சேமிக்கப்படுவதில்லை என்பது முறைகேட்டை குறைக்கும்.
சில கேள்விகள்...

ஒப்பந்தப்புள்ளி விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் முறை பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் விண்ணப்பதாரர் நிலையில் எழும் சந்தேகங்கள், தேவையான வசதிகள் எல்லாம் சீர் செய்யப்பட வேண்டும்.

உதாரணமாக அடுத்த கேள்விக்கு தாவிச் சென்ற பின்பு, திரும்ப விடை தெரியாத கேள்விக்கு யோசித்து பதிலளிப்பது எப்படி? என்பது போன்ற பல்வேறு ஐயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

மாதிரி தேர்வுகள் மூலம் பயிற்சிகள் வழங்கலாம், வெள்ளோட்டம் பார்த்த பின்னர் ஆன்லைன் தேர்வை நடைமுறைப்படுத்தலாம்.

தேர்வு நடத்தும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைப்பதால், விண்ணப்பதாரர்களின் கட்டணத் தொகை உயரலாம் மற்றும் வினாத்தாள் வெளியாவது போன்ற முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே குரூப்-2 தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு தோல்வி அடைந்திருப்பது அதற்கு சான்றாக காட்டப்படுகிறது. எனவே இதுபோன்ற குறைகளுக்கும் வழியிருக்கக்கூடாது.

நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுவது, விரைந்த செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் அத்தியாவசியமாகும். குறைகளை கடந்து ஆன்லைன் தேர்வு என்ற அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தன்னையும், தமிழக மாணவர்களையும், விண்ணப்பதாரர்களையும் தயார்படுத்த வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு!

To Join Whatsapp Job Alert

Bharat Electronics Limited (BEL) Recruitment for Senior Engineer Posts

Image result for Bharat Electronics Limited (BEL)

Org Name
 Bharat Electronics Limited (BEL)

Qualification 
B.E / B. Tech/AMIE

Job Location
 Across India

Selection Process
 Written Exam, Interview

Name of the Post
Sr. Engineer / E-III (Civil) Job Posts
Sr. Engineer / E-III (Electrical) Job Posts
Sr. Engineer / E-III (Mechanical) Job Posts

Last Date 25/08/2018

Official Notification Form 

To Join Whatsapp Job Alert

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

Image result for iob

சென்னையைத் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 20 மேலாளர், சீனியர் மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 20 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager (Information Security) - 04
பணி: Manager (Information System Audit) - 06
பணி: Senior Manager (Information Security) - 04
பணி: Senior Manager (Information System Audit) - 06

வயதுவரம்பு: 

25 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 

மேலாளர், சீனியர் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 

பொதுப் பிரிவினர் ரூ.500, எஸ்சி,எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 

www.iob.in என்ற அதிகார்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.08.2018

முழுமையான விவரங்கள் அறிய Click Here


To Join Free Whatsapp Job Alert


ஆசிரியர் பணிக்கு இனி 2 தேர்வுகள்: புதிதாக போட்டித் தேர்வு அறிமுகம்|

Image result for ஆசிரியர் பணிக்கு இனி 2 தேர்வுகள்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுடன் புதிய நியமனத்துக்கான போட்டித்தேர்வு என இனி இரண்டு தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.

அதே நேரத்தில் வெயிட்டேஜ் முறை இனி கிடையாது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே போட்டித் தேர்வை எழுத முடியும். இந்த இரு தேர்வுகளையும் தனித் தனியாக நடத்தலாம் என்றும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியராக நியமனம் பெறுவதற்கான தகுதித் தேர்வாக மட்டுமே உள்ள நிலையில் அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றாலே போதும். இந்த நிலையில் அரசுப் பள்ளியில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன், பணி வேண்டுவோர் வழங்கும் கல்விச் சான்றிதழின்படி பெற்ற மதிப்பெண்ணுக்கு ஈடாக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் அதிக தரம் பெற்றவர்கள் இன சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்ய உத்தேசிக்கப்பட்டது. 

இவ்வாறு ஆசிரியர் தகுதித் தேர்வுடன் வெயிட்டேஜ் மதிப்பீட்டு முறை பின்பற்றுவதன் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்னர் தேர்ச்சி பெற்ற பணி வேண்டுவோரின் கல்வித் தகுதிக்கான மதிப்பெண் தற்போது தேர்ச்சி பெற்றவர்களின் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்ணுடன் ஒப்பிடுகையில் அவர்களது வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் வேறுபாடுகள் காணப்பட்டு சமன்பாடு இல்லாத நிலை ஏற்படலாம். மேலும் ஆந்திர போன்ற பிற மாநிலங்களில் இந்த வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை. அங்கு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் நியமனத்துக்கான போட்டித் தேர்வு தனித் தனியாக நடத்தப்படுகிறது. 

வெயிட்டேஜ் முறையில் இடர்ப்பாடுகள்...: 

ஆசிரியர் தகுதித் தேர்வுடன் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதில் ஒவ்வொரு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி, இதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மற்றும் தரவுகளைப் பராமரிப்பதிலும் இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் கணக்கீட்டின்படி ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே ஆசிரியர் பணி நியமனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பணி வேண்டுவோர் மத்தியில் ஏற்படுகிறது. 
இவ்வாறு தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம் தெரிவித்த பரிந்துரைகள் சார்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் துறைத் தலைவர்கள், உயர் அலுவலர்களுடன் கடந்த ஜூன் 14-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கீழ் கண்டவாறு முடிவெடுக்கப்பட்டது. 

தனித் தனியாக இரு தேர்வுகள்: 

தமிழ்நாடு மாநிலப் பொதுப்பள்ளி கல்வி வாரியக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பரிந்துரையினை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வை தனியாகவும், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தெரிவுக்கான போட்டித் தேர்வையும் தனியாகவும் நடத்தலாம். அவ்வாறு போட்டித் தேர்வு எழுதுதவற்கு விண்ணப்பிப்போர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியம்.

தமிழ்நாடு பொதுப் பள்ளிக் கல்வி வாரியம் அளித்த பரிந்துரை, அதன் மீது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆகியவற்றை அரசு கவனமாக ஆய்வு செய்து, ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களின் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித்தேர்வாகவும், அரசுப் பள்ளிகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர்களைத் தெரிவு செய்வதற்கு உரிய கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று, போட்டித் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்துவது என்றும் அதன் அடிப்படையில், பணிநியமனம் குறித்த உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர்களைத் தெரிவு செய்வது என அரசு முடிவு செய்து அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

To Join Free Whatsapp Job Alert
-