Wednesday, June 6, 2018

பொறியியல் பட்டதாரிகளுக்கு Power System Operation Corporation Ltd நிறுவனத்தில் வேலை

Image result for பொறியியல் பட்டதாரிகளுக்கு

பொதுத்துறை நிறுவனமான Power System Operation Corporation Ltd நிறுவனத்தில் நிர்வாக பயிற்றுனர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பி.இ., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Executive Trainees (Electrical): 

45 இடங்கள் (பொது-25, ஒபிசி-10, எஸ்சி-5, எஸ்டி-5). 

தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் (பவர்)/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ பவர் சிஸ்டம்ஸ்/ பவர் (எலக்ட்ரிக்கல்) இன்ஜினியரிங் பாடத்தில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி (இன்ஜினியரிங்) பட்டம்.

2. Executive Trainees (Computer Science): 19. 

தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் பி.இ./பி.டெக்.,/பி.எஸ்சி (இன்ஜினியரிங்) பட்டம்.

வயது: 30.7.2017 தேதிப்படி 18 முதல் 25க்குள். 

கல்வித்தகுதியுடன் கேட்-2018 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கேட்-2018 தேர்வின் மதிப்பெண்கள், குழு விவாதம், நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: 

ரூ.500/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் www.posoco.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.6.2018.

No comments:

Post a Comment