Wednesday, June 27, 2018

பிஇ/எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு

Image result for பிஇ/எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல்

இன்ஜி., தரவரிசை பட்டியல்:

சென்னை அண்ணா பல்கலை., இன்ஜினியரிங் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், மே 3 ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்கள் 1,59,631. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 5397. கவுன்சிலிங்கிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் 1,04,453. கட் ஆஃப் மார்க் பொறுத்தவரை 10 பேர் 200 க்கு 200 பெற்றுள்ளனர். ஜூலை 1 முதல் மருத்துவ கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள். மருத்துவ கவுன்சிலிங் முடிவடைந்த பிறகு இன்ஜினியரிங் கவுன்சிலிங் துவங்கப்படும் என்றார்

மருத்துவ தரவரிசை பட்டியல்:

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை தாம்பரத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இந்த தரவரிசை பட்டியல் குறித்த முழு விபரமும் இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்பட உள்ளது. ஜூலை 1 முதல் 10ம் தேதி வரை முதல்கட்ட மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும் என்று அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment