Monday, June 18, 2018

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழிலும் எழுத அனுமதி

Related image

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (சிடிஇடி) தமிழ் உள்பட 20 இந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இத்தேர்தவை எழுத முடியும். தமிழ் உள்பட 17 மொழிகளில் தேர்வு நடத்தப்படத்தப்பட மாட்டாது என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

கடும் எதிர்ப்பு: 

மத்திய அரசுப் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் தொடக்கக் கல்வி, உயர் நிலைக் கல்வி ஆசிரியர் பணிக்கு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில்தான் இத்தேர்வை எழுத வேண்டும் என்ற சிபிஎஸ்இ அறிவிப்புக்கு தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

முடிவு மாற்றம்: 

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சிபிஎஸ்இ-யின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஏற்கெனவே நடத்தி வந்ததுபோல 20 மொழிகளிலும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்' என்று சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டார். இது தொடர்பான தகவலை அவர் சுட்டுரையிலும் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, முன்பு நடத்தியதுபோல ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, வங்க மொழி, காரோ (மேகாலயம், அஸ்ஸாம், திரிபுராவில் பேசப்படும் மொழி), குஜராத்தி, கன்டனம், காசி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, மிஸோ, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, திபெத்திய மொழி, உருது ஆகிய மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ சுட்டுரையில் அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment