Monday, June 4, 2018

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் நாளை வெளியீடு

Image result for anna university

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

பொறியியல் கல்லுாரிகளில், பி.இ., பி.டெக்., படிப்பில் சேர, ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 1,52,940 மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. 

பி.இ. படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 3-ஆம் தேதி தொடங்கியது. மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையசேவை முடக்கப்பட்டதால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் சனிக்கிழமை முடிவடைந்த நிலையில், அன்றைய தினம் மாலை 6 மணி வரை 1,52,940 மாணவர்கள் விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு 2017-18 கல்வியாண்டில் பி.இ. படிப்பில் சேர 1,40,844 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.

பி.இ. படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு 42 உதவி மையங்களிலும் வரும் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடத்தப்படும். ஜூலை மாதத்தில் கலந்தாய்வும் தொடங்கும். இதற்கான நேரம், தேதி ஆகியவவை அவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ரேண்டம் எண் நாளை செவ்வாய்கிழமை (ஜூன் 5) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment