Monday, June 11, 2018

தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்

Image result for தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு

தொழிலாளர் தமிழக அரசின் அயல்நாட்டு நிறுவனம்:

அமைச்சகத்தின் நம்பகமான சான்றிதழுடன் இந்நிறுவனம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அது மட்டுமன்றி இந்தியர்கள் வெளிநாடுகளில் புரிந்து வரும் செயல்திட்டங்களுக்கும் இங்கிருந்து ஆட்களை அனுப்பி வைக்கிறது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு விபத்து மற்றும் உடல்நல காப்பீடுகளையும் வழங்குகிறது.

மேலும், வெளிநாட்டு பணிக்காக அனுப்பி வைக்கப்படும் நபர்களின் நிலை குறித்து அவ்வபோது ஆராய்வதாகவும் அதன் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார். இவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புதல், பதிவு செய்தல், அவ்வபோது நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொள்ளச் செய்தல் போன்றவற்றையும் மேற்கொள்வதாக இதன் நிர்வாக அலுவலர் கூறுகிறார்.விவரங்களை பதிவு செய்வதற்கு செய்ய வேண்டியவைகள்

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள செய்ய வேண்டிய வழிமுறைகள்.

1. தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தாங்கள் பணிக்கு செல்ல விரும்பும் துறைகளில் 2 வருட அனுபவம் இருப்பது நல்லது. 18 வயதை பூர்த்தி செய்தவர்கள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருந்தால் இமிக்ரேஷன் தொல்லை இருக்காது.

2. விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்களின் விலை 600 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரை மாறும். இவற்றோடு சேவை வரியும் வசூலிக்கப்படும்.

இது தொடர்பான விளக்கங்களை பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
Integrated Employment Office Complex, 
No.42, Alandur Road, 
Govt. Women ITI Premises, 
Thiru-vi-Ka Industrial Estate, 
Guindy, Chennai, 
Tamil Nadu 600032

மேலும் விண்ணப்பங்களை 2 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை  044 2250 5886என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்தை காணலாம். உதவிகள் பெற தொடர்பு கொள்ளவும்

வெளிநாடுகளுக்கு பணிபுரிய செல்லும் இந்தியர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் அவர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களையும் வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் பணி புரியும்போது உதவிக்கு 1800 11 3090, (+91) 011 40 503090 என்ற தொலைபேசி எண்களை அழைத்து கூடுதல் தகவல்கள் பெறலாம்.

தாங்கள் அணுகும் ஏஜென்சி உண்மையானதா என்று அறிய www.moia.gov.in என்ற இணையதளத்தை காணலாம். மேலும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் செயல் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள www.owrc.in என்ற இணையதளத்தை காணலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தை காணுங்கள்

No comments:

Post a Comment