Saturday, June 2, 2018

புதுச்சேரியில் சென்டாக் கலந்தாய்வு 28–ந் தேதி தொடங்குகிறது

Image result for சென்டாக் கலந்தாய்வு

புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் உள்ள இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தொழிற்கல்வி பிரிவுகள், தொழிற்கல்வி அல்லாத பாடப்பிரிவுகள், ஓட்டல் மேலாண்மை, பட்டயப்படிப்பு, நுண்கலை இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை மற்றும் பகுதி நேர பட்டயப்படிப்பு போன்றவற்றிற்கு ஒரே விண்ணப்பம் மூலம் இணையதளத்தில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வை நடத்த சென்டாக் அமைப்பிற்கென்று புதிய இணையதளம் (www.centacpuducherry.in) உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, இந்த இணையதளத்தில் கடந்த 30–ந் தேதி முதல் கலை, அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

அடுத்த கட்டமாக எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், பி.எஸ்சி. நர்சிங், எம்.எல்.டி., எம்.ஆர்.ஐ.டி., என்ஜினீயரிங், பி.பார்ம், பி.ஏ. எல்.எல்.பி., பி.எஸ்சி. விவசாயம், தோட்டக்கலை ஆகிய பாடப்பிரிவுகளுக்கு வருகிற 6–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வரைவு தரவரிசை பட்டியல் 20–ந் தேதி வெளியிடப்படும். அதில் ஆட்சேபனை இருப்பின் திருத்தம் செய்ய 21–ந் தேதி மாலை 5 மணி வரை தெரிவிக்கலாம். 22–ந் இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

முதற்கட்ட கலந்தாய்வு வருகிற 28–ம் தேதி தொடங்கப்படும். இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு இடங்களை பெறும் மாணவர்கள் அடுத்த மாதம்(ஜூலை) 12–ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

அதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் (ஜூலை) 18–ந் தேதி 2–வது கட்ட கலந்தாய்வு தொடங்கப்படும். இந்த கலந்தாய்வில் சேர்ந்து இடங்களை பெற்ற மாணவர்கள் ஆகஸ்டு மாதம் 3–ந் தேதிக்குள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும். மேலும் தகவல்களை www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment