Thursday, May 3, 2018

நீட் தேர்வு 'ஹால் டிக்கெட்': சிபிஎஸ்இ புதிய அறிவிப்பு

Related image

நீட் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை விரைவில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ். மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 6) நடைபெற உள்ளது. இத்தேர்வில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். 

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை https://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் சிபிஎஸ்இ வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தங்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இதுவரை பதிவிறக்கம் செய்யாதோர் உடனடியாக அதனைப் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். 
ஏனென்றால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான வசதி குறுகிய காலமே செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

ADMIT CARD LINK -> Click Here

No comments:

Post a Comment