Friday, May 25, 2018

நீட் தேர்வு: விடைகள் பட்டியல் வெளியீடு

Image result for நீட் தேர்வு: விடைகள் பட்டியல் வெளியீடு

 NEET 2018 Official Answer Key - Click here

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட நீட் தேர்வின் விடைகள் பட்டியல் (Answer Key) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

நீட் தேர்வுக்கான விடைகள் பட்டியல், விடைத்தாள் நகல் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. விடைகள் பட்டியல், விடைத்தாள் நகல் ஆகியவற்றை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் ஞாயிற்றுக்கிழமை (மே 27) மாலை 5 மணி வரை சரி பார்க்கலாம். 

விடைப்பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் ஏதேனும் தவறாக இருப்பதாக மாணவர்கள் கருதினால், அதனைத் தெரிவிக்கலாம்.அவ்வாறு மாணவர்கள் தெரிவிக்கும் ஒவ்வொரு விடைக்கும் ரூ.1000 செயலாக்கக் கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர்கள் தெரிவித்த விடைகள் சரியாக இருக்கும்பட்சத்தில், அந்த வினாக்களுக்கு மதிப்பெண் அளிக்கப்படும். எக்காரணம் கொண்டும் செயலாக்கக் கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. விடைகள் விவகாரத்தில் சிபிஎஸ்இயின் முடிவே இறுதியானது.

No comments:

Post a Comment