Monday, May 14, 2018

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் இளநிலை வேளாண் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம்

Image result for தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில்

வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்பு மற்றும் 26 இணைப்பு கல்லூரிகளில் 12 இளநிலை வேளாண் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் 18ம் தேதி இணையதளம் மூலமாக தொடங்குவதாக தெரிவித்தார். www.tnau.ac.in என்ற இணையதள முகவரியை தெரிவித்த அவர் ஜூன் 17ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவித்தார். கல்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் ஜூன் 22ம் தேதி வெளியிடப்படுகிறது.

சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்குகிறது. இணையதளத்தில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9 முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொழில் கல்விக்கான கலந்தாய்வு ஜூலை 16ம் தேதி தொடங்குகிறது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 23 முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி கல்லூரிகள் துவங்குவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment