இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனமான கொங்கன் ரயில்வே கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 113 ஸ்டேசன் மாஸ்டர், கூட்ஸ் கார்டு, அக்கவுண்ட் அசிஸ்டன்ட், சீனியர் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 113
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Station Master - 55
2 Goods Guard - 37
3 Accounts Assistant Cey -11
4 Senior Clerk Cey - 10
தகுதி:
சீனியர் கிளார்க் பணிக்கு பி.காம் முடித்தவர்களும், மற்ற பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இதர பணிகளும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயதுவரம்பு:
01.07.2018 தேதியின்படி 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள், ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை:
http://www.konkanrailway.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.05.2018
விவரங்கள் அறிய click here
No comments:
Post a Comment