Monday, December 31, 2018

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பயிற்சிப் பணி!

பி.எஸ்.என்.எல். க்கான பட முடிவு

நிறுவனம்: 

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் சுருக்கமாக பி.எஸ்.என்.எல். என அழைக்கப்படும் பொதுத்துறை தொலைத் தொடர்புநிறுவனம்

வேலை: 

மேனேஜ்மென்ட் டிரெயினி (டெலிகாம் ஆபரேசன் )

காலியிடங்கள்: 

மொத்தம்150. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 76 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 40 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 23 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 11 இடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி: 

டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக் படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

வயது வரம்பு: 

30 வயதுக்கு உட்பட்டவர்கள். சில பிரிவினருக்கு வயது வரம்புத் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.1.2019

தகவல்களுக்கு: www.bsnl.co.in

TNPSC Recruitment 2019 580 AAO Posts

Tamil Nadu Public Service Commission க்கான பட முடிவு

Organization Name
Tamil Nadu Public Service Commission
Job Category
Tamilnadu Govt Jobs
No. of Posts:
580 Vacancies
Name of the Posts
Assistant Agricultural Officer (AAO) 
Job Location
Tamilnadu
Selection Procedure
Written Exam, Certificate Verification
 Apply Mode:
Online
Official Website:
Starting Date:
27.12.2018
Last Date:
27.01.2019
Official Notification & Application Link
Official Website Career Page
Official Notification PDF
Online Application Form

2019-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி திட்ட அட்டவணை வெளியீடு



2019-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி திட்ட அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

Sunday, December 23, 2018

நூலகர் தேர்வு மார்ச் 30-க்கு மாற்றம்

நூலகர் தேர்வு க்கான பட முடிவு

நூலகர் தேர்வுக்கான தேதி மார்ச் 30-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) செயலாளர் நந்தகுமார் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த 17-இல் வெளியானது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு முதன்மை எழுத்துத் தேர்வு வரும் வரும் பிப்ரவரி 23-இல் நடைபெறுகிறது.

நூலகர் தேர்வு: இதனிடையே, பல்வேறு துறைகளில் காலியாக உள்ள நூலகர் தேர்வு பிப்ரவரி 23-இல் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. குரூப் 2 முதன்மைத் தேர்வு காரணமாக, நூலகர் தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வணிகத் துறை, வேளாண்மை, அண்ணா நூலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலியாக உள்ள நூலகர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு பிப்பரவரி 23-ஆம் தேதிக்குப் பதிலாக மார்ச் 30-இல் நடத்தப்படும்.

இதேபோன்று, தொல் பொருளியல் துறையிலும் காலியாகவுள்ள நூலகர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி 24-ஆம் தேதிக்குப் பதிலாக மார்ச் 31-இல் நடைபெறும். இந்தத் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெறும்.

இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு

இனி ஆன்லைன் க்கான பட முடிவு

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் முற்றிலும் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முற்றிலும் பள்ளிக் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தின் (எமிஸ்) மூலமாக மட்டுமே நடைபெறும். கலந்தாய்வுக்குப் பிறகு நிர்வாகக்ôரணங்கள் உள்பட வேறு எந்தக் காரணங்களுக்காகவும் மாறுதல் கோருவது தவிர்க்கப்பட வேண்டும். 

வரும் 24-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர் பட்டியலை மாவட்டக் கல்வி அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி என்ன?: தமிழகத்தில் நிகழாண்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜுன் மாதம் நடைபெற்றது. அப்போது மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் பெரும் சர்ச்சை எழுந்தது. ஆன்லைனில் காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டினர். 

இதைத் தொடர்ந்து ஒரு மாவட்டத்தில் அதிக நாள்கள் பணியாற்றுபவர்கள்தான் இடமாறுதலுக்கு முன்னுரிமை பெற்றவர்கள். 10 ஆண்டுகளாகப் பிற மாவட்டங்களில் பணியாற்றி, சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் கிடைக்காமல் ஏராளமான ஆசிரியர்கள் தவிக்கிறார்கள். ஆனால் சில மாதங்கள் வெளியூர்களில் வேலை பார்த்துவிட்டு, லஞ்சம் கொடுத்து சொந்த மாவட்டத்துக்கு மாறுதல் பெற்று பலர் வந்துள்ளனர். 

இது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், எந்த பலனும் இல்லை. எனவே இந்த ஆண்டு நடந்த ஆசிரியர்களின் பொது இடமாறுதல் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும். 

ஆசிரியர் பொது இடமாறுதலில் நடந்த விதிமீறல்கள் மற்றும் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் ஜன.3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது, பொது மாறுதல் கலந்தாய்வில் எத்தனை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை முழுமையான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது.

மத்திய சுகாதாரத்துறையில் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக உதவியாளர் வேலை


மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் (இஎஸ்ஐ) சென்னை கிளையில் காலியாக உள்ள 111 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 111

பணியிடம்: சென்னை 

பதவி: Staff Nurse - 84
சம்பளம்: மாதம் ரூ. 44900 -142400
வயதுவமர்பு: 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: Pharmacist (allopathy) - 09
சம்பளம்: மாதம் ரூ.29200 - 92300
வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: Social Guide/Social worker - 02
சம்பளம்: மாதம் ரூ. 25500 - 81100
வயதுவரம்பு: 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதவி: Lab Assistant - 10 
சம்பளம்: மாதம் ரூ.21700 - 69100

பதவி: O.T Assistant - 05
சம்பளம்: மாதம் 21700 - 69100

பதவி: Pharmacist (Ayur) - 01
சம்பளம்: மாதம் ரூ. 29200 - 92300 
வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: நர்சிங், மருந்தாளுநர், சமூக சேவை, எம்எல்டி முடித்தவர்கள் சம்மந்தபட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் முழுமையான விவரங்களை அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in அல்லது www.esichennai.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.01.2019

விவரங்கள் அறிய Click Here

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்பு: மாத இறுதியில் வெளியீடு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு க்கான பட முடிவு

நாடு முழுவதும் 16.91 லட்சம் பேர் எழுதிய மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைக்குறிப்புகள் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. 

மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளான சிபிஎஸ்இ, கேந்திர வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தகுதித் தேர்வை கடந்த ஆண்டு வரை சிபிஎஸ்இ நடத்தி வந்தது. 

இந்த ஆண்டு தேசிய அளவிலான தேர்வுக் குழுமம் தொடங்கிய நிலையில், சிபிஎஸ்இதான் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை கடந்த 7-ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 16 லட்சத்து 91 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். கடந்த ஆண்டு வரை இந்த தேர்வுகளின் விடைக்குறிப்புகள் தேர்வு நடந்த 10 நாள்களுக்குள் வெளியிடப்பட்டு விடும். 

ஆனால் கடந்த 7-ஆம் தேதி நடந்த தகுதித் தேர்வின் விடைக்குறிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இதனால் தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.  இந்நிலையில், விடைக்குறிப்புகளை டிச. 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிக்குள் வெளியிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. 

இதையடுத்து, 2019 ஜனவரி மாத இறுதியில் தேர்வு முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்துள்ளது.  தகுதித் தேர்வு எழுதியவர்கள் மேற்கண்ட விடைக்குறிப்புகளை சிபிஎஸ்இ இணைய தளமான ctet.nic.inp இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதித் தேர்வு எழுதியுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு முதல் டிஜிட்டல் முறையில் சான்றுகள் வழங்கப்பட உள்ளன.

மதிப்பெண் பட்டியல்கள், தேர்ச்சிக்கான சான்றுகள் அனைத்தும் க்யூ.ஆர். குறியீடு கொண்டதாக இருக்கும்.

குரூப் 2 முதன்மைத் தேர்வு: வரும் 24 முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம்

தொடர்புடைய படம்

குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வுக்குத் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வு எழுதுவோர் வரும் 24-ஆம் தேதி முதல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டுமென டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது இதுகுறித்து, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை எழுத்துத் தேர்வுக்குகஈ தற்காலிகமாககஈ தெரிவு செய்யப்பட்டுள்ளோர் வரும் 24-ஆம் தேதி முதல் தங்களது அசல் சான்றிதழ்களைஏஈ பதிவேற்றம் செய்ய வேண்டும். 

அரசு கேபிள் தொலைக்காட்சி வழியாக தேர்வாணைய இணையதளத்தில் சான்றுகளை பதிவேற்றம் செய்யலாம்.  சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாவிட்டால் முதன்மைத் தேர்வில் கலந்து கொள்ளத் தேர்வாளர்களுக்கு விருப்பமில்லை எனக் கருதப்படும். 

மேலும் முதனிலை எழுத்துத் தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணமாக ரூ.150-ஐச் செலுத்த வேண்டும். 

ஜனவரி 10-ஆம் தேதி கட்டணத்தைச் செலுத்த கடைசி நாளாகும். அதற்குள்ளாக சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே அவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய முடியும்.

யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு: 2019 பிப்.4 முதல் நேர்காணல்

தொடர்புடைய படம்

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வை முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக யுபிஎஸ்சி நடத்தி வருகிறது.

2019 ஆம் ஆண்டுக்கான இந்த தேர்வில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வு நடந்து முடிந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்டமான முதன்மைத் தேர்வு கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி இப்போது வெளியிட்டுள்ளது. வெற்றி பெற்றவர்களின் வரிசை எண், பெயர்களுடன் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் இறுதிக் கட்டமான நேர்முகத் (பர்சனாலிட்டி) தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

நேர்முகத் தேர்வானது 2019 பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்கி நடத்தப்பட உள்ளது. இந்த நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை தகுதி பெற்ற அனைவரும் www.upsc.gov.in, www.upsconline.in ஆகிய இணையதளங்களிலிருந்து 2019 ஜனவரி 8 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, December 17, 2018

தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி: ஐடிஐ, பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!


தெற்கு ரயில்வேயின் சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 4429

பயிற்சி: தொழில் பழகுநர் (Apprentices)

1. சென்னை - 924
2. திருச்சி - 853
3. கோயம்புத்தூர் - 2652

தகுதி: Welder, Carpenter, Painter, Wireman, Fitter, Electrician, R&AC, Winder(Armature), Electronics Mechanic, Turner, Machinist, Diesel Mechanic, MMV,PASAA போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்களும், Medical Laboratory Technician (Radiology, Pathology and Cardiology ) பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.sr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2019

விவரங்கள் அறிய 
http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Act_App_Ponmalai.pdf 

http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Act_App_Podanur.pdf 


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. க்கான பட முடிவு


தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிந்து வருட கணக்கில் காத்திருந்து பழகிபோன தேர்வாளர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக, தேர்வுகள் நடத்தப்பட்டு முதல் முறையாக ஒரு மாதத்திலேயே முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

GROUP 2 RESULT LINK

Monday, December 3, 2018

மத்திய இரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு

தொடர்புடைய படம்

வட மத்திய இரயில்வேத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-வது தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு தகுதிகள் உடையவர்கள் ஆவர். மொத்தம் 703 பயிற்சியுடன் கூடிய காலிப் பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : வட மத்திய இரயில்வே

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 703

கல்வித் தகுதி:- 10-வது தேர்ச்சி ,ஐடிஐ

வயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.ncrald.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 31

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்:- பொது மற்றும் ஓபிசி:ரூ.100 இதர விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை

அதிகாரப்பூர்வஅறிவிப்பு : Click Here 


நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி’ கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி க்கான பட முடிவு

மத்திய ஜவுளி துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி’ கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்: பி.டெஸ்., பி.எப்டெக்., எம்.எப்.எம்., எம்.டெஸ்., எம்.எப்டெக்.,

தகுதிகள்: இளநிலை படிப்பிற்கு 12ம் வகுப்பு முடித்தவர்களாகவும், முதுநிலை படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., /மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சேர்க்கை சதவீதத்தில் இடஒதிக்கீடு வழங்கப்படும்.

வயது வரம்பு: இளநிலை படிப்பிற்கு 23 வயதிற்கு குறைந்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். முதுநிலை படிப்பிற்கு வயது வரம்பு இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை என்.ஐ.எப்.டி.,யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

தேர்வு முறை: நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். பி.டெஸ்., படிப்பிற்கு கிரியேடிவிட்டி எபிலிட்டி டெஸ்ட் (சி.ஏ.டி.,), பி.எப்டெக்., எம்.எப்.எம்., எம்.எப்டெக்., ஆகிய படிப்புகளுக்கு ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் (ஜி.ஏ.டி.,), எம்.டெஸ்., படிப்பிற்கு சி.ஏ.டி., மற்றும் ஜி.ஏ.டி., ஆகிய இரு தேர்வுகளையும் மாணவர்கள் எழுத வேண்டும். அனைத்துத் தேர்வுகளும் எழுத்துத் தேர்வாகவே நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 28

தேர்வு நாள்: ஜனவரி 20

விபரங்களுக்கு: Click Here

கூகுள் அறிவியல் போட்டி

தொடர்புடைய படம்

உலகம் முழுவதிலும் உள்ள 13 முதல் 18 வயது வரையிலான மாணவர்களின் அறிவியல் சார்ந்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம் அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டியை நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான போட்டிக்கு டிச.,12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

முக்கியத்துவம்: பள்ளி மாணவர்களின் சமூக பிரச்சனைகள் சார்ந்த அறிவை விரிவுபடுத்தி, அந்த பிரச்சனைகள் குறித்து அவர்களுக்குள் எழும் கேள்விகளுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம், அவர்களையே விடை தேட வைக்கும் ஒரு முயற்சியே இந்த போட்டி.

சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், ரோபடிக்ஸ், விண்வெளி, சுகாதாரம், சமுதாயம், உணவு, பயணம், ஆற்றல் மற்றும் ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் ஆகிய பத்து பிரிவுகளில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தேடுத்து தங்களது ஆராய்ச்சியை மாணவர்கள் மேற்கொள்ளலாம். தனி நபராகவோ அல்லது இரண்டு முதல் மூன்று நபர்களைக் கொண்ட குழுவாகவோ இந்த போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். பெற்றோரது அனுமதி அவசியம்.

பரிசுகள்: 
* உலகளவில் முதல் இடம் பெறும் மாணவருக்கு ‘கிராண்ட் பிரைஸ்’ ஆக 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 35 லட்சத்து 69 ஆயிரம்) அவர்களது உயர்கல்விக்கான உதவித்தொகையாகக் கூகுள் நிறுவனத்தின் சார்பாக வழங்கப்படுகிறது.

* லீகோ எஜூகேஷன் சார்பாக 15,000 அமெரிக்க டாலர்கள் பரிசாகவும், டென்மார்க்கில் உள்ள லீகோ நிறுவனத்தைச் சுற்றி பார்க்கும் வாய்ப்பு.

* நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் சார்பாக, ‘எக்ஸ்ப்ளோரர் அவார்ட்’, 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் களேபாகோஸ் தீவுகளுக்கு 15 நாட்கள் கல்வி சுற்றுலா.

* சயின்டிபிக் அமெரிக்கன் நிறுவனம் சார்பாக ‘இனோவேட்டர் அவார்ட்’ என்கிற விருது மற்றும் 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கல்வி உதவித்தொகை.

* சிறந்த தொழில் நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட மாணவருக்கு காலக்டிக் நிறுவனம் சார்பாக ‘பயனீர் அவார்ட்’ ஆக 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்.

* சிறந்த முறையில் தங்களது மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்குத் துணை நின்ற ஆசிரியருக்கு, லீகோ நிறுவனத்தின் சார்பாக ‘இன்ஸ்பயிரிங் எஜூகேட்டர் அவார்ட்’ மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை வாங்குவதற்காக 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்.

* உலக அளவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற 20 மாணவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தைச் சுற்றி பார்க்கும் வாய்ப்பு.

* மாநில அளவில் வெற்றி பெறும் 53 மாணவர்களுக்கு ‘ஆண்ட்ராய்ட் டேப்ளெட்’ மற்றும் இதர பரிசுகள். 100 ரீஜினல் வெற்றியாளர்களுக்குப் பரிசாக ‘குரோம்புக்’ மற்றும் இதர பரிசுகள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த போட்டிக்காக கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 12

விபரங்களுக்கு: Click Here

Saturday, December 1, 2018

Tamil Nadu Forest Department admit Cards 2018

Tamil Nadu Forest Department admit Cards க்கான பட முடிவு

Admit Card 2018 Link 

Mindtree Off Campus 2018 @ KIOT Salem on 07th Dec 2018

Mindtree க்கான பட முடிவு

Company Name
 Mindtree

Post Name
 Software Engineer

Skills required
Good Communication Skill
Good Analytical Skills

Qualification
- B.E. / B. Tech / (CSE, ECE, EEE, E&I, IT, Electronics and Telecommunication Engineering, Information Science, Telecommunication Engineering), MCA

Experience: Freshers
 (Only for 2017 & 2018 Batches)

Selection Process 
1. Aptitude Test
2. Programming Test
3. Technical & HR Interview

Walk in Location
 Salem

Last Date for Registration
 04.12.2018

Online Written Test
 07.12.2018 8:30 AM

Programming Test, Technical & HR Interview
 08.12.2018 & 09.12.2018 8:30 AM

College Address and Venue
Knowledge Institute of Technology,
Knowledge Business School Salem
Training and Placement Cell,
KIOT Campus, Kakapalayam (Po.),
Salem – 637 504.

Registration Link


TCS Off Campus 2018

TCS க்கான பட முடிவு

Company Name
 TCS

Post Name
 Associate System Engineer

Pay Scale
 As Per Company Norms

Skills required
Good Communication Skill
Good Analytical Skills

Qualification: 
B.E/B.Tech/M.E/M.Tech/M.Sc/MCA 
2017/2018 YOP (Year Of Passing)

Registration End Date
 9 December 2018

Hall Ticket Issue Date
 12 December 2018

Date of Test
16 December 2018

Join TCS
 January 1st Week onwards

Registration Link



Friday, November 30, 2018

தமிழ்நாடு தொழிலாளர் துறையில் வேலை



சென்னை, கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஆட்சி எல்லையில் காலியாக உள்ள 21 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை, கூடுதல் தொழிலாளர் ஆணையரால் நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 21 

பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant)

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சிறப்பு தகுதி: மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 + 50,000 என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் 

வயதுவரம்பு: 01.07.2018 அன்று 18 வயது பூர்த்தி அடைந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு வயதுவரம்பில் உச்ச வயது வரம்பு இல்லை. 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள்: இப்பணிக்கான விண்ணப்பங்களை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) அலுவலகங்களிலும், சென்னை மற்றும் வேலூர், தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களிலும் மற்றும் சென்னை, தொழிலாளர் கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் நேரிலும் சமர்ப்பிக்கலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், 
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியக் கட்டிடம், 
6வது தளம், டி.எம்.எஸ். வளாகம், 
சென்னை - 600 006. 
தொலைபேசி 044 2433 9934

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.12.2018 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலும் சமர்ப்பிக்கலாம்.

விவரங்கள் அறிய Click Here  அல்லது  click here


பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் செக்யூரிட்டி ஏஜென்ட் வேலை


ஏர் இந்தியா ஏர் போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 63 செக்யூரிட்டி ஏஜென்ட் பணிக்கு தகுதியான இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 63 (ஆண்கள்-53, பெண்கள்-10) 

பதவி: Security Agents 

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தீயணைப்பு மற்றும் பேரீடர் மேலாண்மை மையத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: பொது பிரிவினர் 28 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 31 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.20.190

தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 
Play Ground, Residential Complex, 
New Quarters, 
Airport Authority of India, 
1 no. Airport
Gate (VIP Road), 
Dum Dum, Kolkata-700 052.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.12.2018

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை கொல்கத்தாவில் மாற்றத்தக்க வலையில் “AIR INDIA LTD” என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். டி.டி.யின் பின்புறம் பெயர், பிறந்த தேதி, செல்போன் எண்ணை எழுத வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி, தேவையான சான்றிதழ்களின் நகல்களில் அட்டெஸ்ட் செய்து அதனுடன் அசல் சான்றிதழ்கள் இணைத்து நேர்முகத்தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும். 
 
விவரங்கள் அறிய  Click Here

ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியிடம் உள்பட ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பிப்பதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளது.

புதன்கிழமையுடன் (நவ. 28) தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புயல் பாதிப்பு காரணமாக விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், வரைவாளர் மூன்றாம் நிலை ஆகிய காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த புதன்கிழமை கடைசி நாளாகவும், தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை அலுவலர் உதவி இயக்குநர் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க நவம்பர் 21-ஆம் தேதியும், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நிலை எண் 3 மற்றும் 4 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 3-ஆம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கஜா புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களின் நலன்கள் கருத்தில் கொள்ளப்பட்டது. 

இதையடுத்து, ஐந்து பதவிகளிலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 10 ஆகும். தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்த டிசம்பர் 12-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிக்கப்பட்ட போதிலும், தேர்வுகள் நடைபெறும் நாள்களில் மாற்றம் ஏதுமில்லை என்று டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Tuesday, November 27, 2018

முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் (27.11.2018) முதல் விண்ணப்பிக்கலாம்

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் க்கான பட முடிவு


சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 

இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் அந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தவர்களுக்கும், அவர்களது வேண்டுகோளை ஏற்று வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த 11-ந் தேதி நடைபெற்ற முதல்நிலை தேர்வில் தெரிய வந்துள்ள கட்-ஆப் மதிப்பெண்களில் 140 மற்றும் அதற்கு மேல் எடுத்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளும் 150 மற்றும் அதற்கு மேல் எடுத்துள்ள பொதுப்பிரிவினரும் இப்பயிற்சிக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். 

டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ள இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் www.mnt-f-r-e-e-ias.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்நிலைத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் நேரில் வந்தோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 24358373, 24330095 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மாதிரி தேர்வுகள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கு விமான சரக்கு பெட்டக நிறுவனத்தில் வேலை


இந்திய விமான ஆணைய நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனங்களில் ஒன்றான ஏஏஐ கிளாஸ் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 372 Security Screeners பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Security Screeners

காலியிடங்கள்: 372

ஒவ்வொரு விமான தளங்களிலும் உள்ள காலியிடங்கள் விவரம்:

1. Madurai - 32
2. Tirupati - 20
3. Raipur - 20
4. Udaipur - 20
5. Ranchi - 20
6. Vadodara - 20
7. Indore - 38
8. Amritsar - 52
9. Mangalore - 38
10. Bhubaneswar - 38
11. Agartala - 22
12. Port Blair - 22
13. Chandigarh - 30

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அத்துடன் என்.சி.சி. சான்றிதழ் அல்லது விமான நிறுவனத்தின் ஏவி.எஸ்.இ.சி. சான்றிதழ் பெற்றிருப்பதுடன் இந்தி, ஆங்கிலம் மொழி அறிவுடன் உள்ளூர் மொழியும் தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு சில பணியிடங்களுக்கு மட்டும் உடற்தகுதி, எழுத்துத் தேர்வும் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர், பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தபால் முலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் The Chief Executive Officer, AAI Cargo Logistics & Allied Services Company Limited, AAI Complex, Delhi Flying Club Road, Safdarjung Airport, New Delhi -110 003  என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும். 

விண்ணப்பம் சென்றுசேர கடைசி தேதி: 15.12.2018

விவரங்கள் அறிய Click Here


Monday, November 26, 2018

தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி மையத்தில் ஜூனியர் நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணி.

தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி மையம் க்கான பட முடிவு


தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி மையம் சுருக்கமாக என்.ஏ.ஆர்.ஐ. என அழைக்கப்படுகிறது. புனேயில் செயல்படும் இந்த மருத்துவ மையத்தில் ஜூனியர் நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 18 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. டிப்ளமோ நர்சிங் மற்றும் பி.எஸ்சி. நர்சிங் படித்தவர்கள் மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ரூ.300க்கு டி.டி. எடுத்து இதற்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. நேர்காணலின் போது எழுத்துத் தேர்வு மற்றும் தனிநபர் நேர்காணல் நடத்தப்படுகிறது. 30-11-2018 மற்றும் 4-12-2018 ஆகிய தேதிகளில் இதற்கான தேர்வுமுறைகள் நடக்கிறது. இது பற்றிய விவரங்களை http://www.nari-icmr.res.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

கணினி தமிழ் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ் விருது க்கான பட முடிவு

முதல்வர் கணினி தமிழ் விருதுக்கான விண்ணப்பங்கள், டிச., 31க்குள் வந்தடைய வேண்டும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ் வளர்ச்சி கருதி, தமிழ் மொழியை கம்ப்யூட்டரில், அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோருக்கு, 2013 முதல், 'முதல்வர் கணினி தமிழ் விருது' வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு, 1 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப்பதக்கம் மற் றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருதுக்கு, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து, தமிழ் மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டிக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள், 2015, 2016, 2017ல் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விருதுக்கான விண்ணப்பம், தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு, டிச., 31க்குள் வந்தடைய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆடை உற்பத்தி இலவச பயிற்சி, கிராமப்புற இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

தொடர்புடைய படம்

தமிழகம் முழுவதும், 23 மாவட்டங்களில், கிராமப்புற இளைஞர்களுக்கு, திருப்பூர் நிப்ட்--டீ கல்லுாரி சார்பில், ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தீன்தயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தில், கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, திருப்பூர் நிப்ட்--டீ கல்லுாரி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தில், திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, பெரம்பலுார், கடலுார், அரியலுார், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி உட்பட, 23 மாவட்டங்களைச்சேர்ந்த, 2,500 இளைஞர்களை தேர்வு செய்து, ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி அளிக்க, திருப்பூர் நிப்ட்--டீ கல்லுாரியில், 2 மையம்; அம்மாபாளையம், வீரபாண்டி பகுதிகளில் தலா ஒன்று; மதுரையில் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒன்று என, மொத்தம், ஐந்து பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் டிச., மாதம் முதல், பயிற்சி துவங்குகிறது.

ஓவன் ஆடை உற்பத்தி டெய்லர், பின்னலாடை டெய்லர், செக்கிங், உற்பத்தி மேற்பார்வையாளர், மெர்ச்சன்டைசர், பேஷன் டிசைனர், தர கட்டுப்பாடு நிர்வாகி என, ஏழுவகை பயிற்சிகள் அளிக்க உள்ளனர்.

இது குறித்து, நிப்ட்-- டீ கல்லுாரி திறன் மேம்பாட்டு துறை தலைவர் சிவஞானம் கூறியதாவது:கிராமப்புற இளைஞர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன், ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. ஏழுவகை பயிற்சிகள் உள்ளன; இளைஞர்கள், கல்வித்தகுதி அடிப்படையில், ஏதேனும் ஒரு பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.இரண்டு ஆண்டுகளில், 2500 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது; முதல்கட்டமாக, 750 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

வரும் டிசம்பர் இரண்டாவது வாரத்தில், பயிற்சி மையங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன.இத்திட்டத்தில், 4 முதல் 5 மாதம் வரை பயிற்சி அளிக்கப்படும் தங்குமிடம், உணவு இலவசம். போக்குவரத்து செலவும் திரும்ப வழங்கப்படும்.டெய்லர், செக்கிங் பயிற்சிக்கு, 5ம் வகுப்பு படித்திருந்தால் போதும். பேஷன் டிசைனருக்கு, பிளஸ்2 படித்திருக்க வேண்டும். 

பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், குடும்பத்தில் யாரேனும் ஒருவர் சுய உதவிக்குழுவில் இருந்தாலோ அல்லது, நுாறுநாள் வேலை வாய்ப்பு திட்ட பயனாளியாக இருந்தால், மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதில், இணைய விருப்பம் உள்ளோர், 97914 83111 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்

Tirunelveli Aavin milk Recruitment for Technician, Driver Job Posts

தொடர்புடைய படம்

Org Name
 Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd

Qualification
 8th,12th, Post graduate degree

Job Location
 Tirunelveli

Name of the Post 
Technician, Driver Post

Apply Mode
Postal

Address
“The General Manager , 
The Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd., 
Reddiarpatty Road, 
Perumalpuram Post, Tirunelveli – 627 007”

Last date
 12/12/2018

Official Notification of Aavin Milk website
↓ 


TNPSC Recruitment 2018 41 AE (Industries) Posts

தொடர்புடைய படம்

Organization Name
Tamil Nadu Public Service Commission

Job Category 
Tamilnadu Govt Jobs

No. of Posts
41 Vacancies

Name of the Posts
Assistant Engineer (Industries), Principal & Various Posts

Qualification
BE.,B-TECH

Selection Procedure 
Written Examination, Interview

Apply Mode 
Online

Official Website 

Starting Date 
26.11.2018

Last Date 
24.12.2018

Online Application & Official Notification Links
Official Website Career Page 
 Notification PDF 
Online Application Form 

Saturday, November 24, 2018

Indian Air Force Tirunelveli Rally Recruitment 2018

Indian Air Force க்கான பட முடிவு

Organization Name
 Indian Air Force

Job Category
 Central Govt Jobs

No. of Posts
 Vacancies

Name of the Posts
Airmen in Group “Y” (Non-Technical) & Various Posts

Job Location
All Over India

Selection Procedure
Written Test,
 Adaptability Test1,
 Adaptability Test2
 Dynamic Factor Test (DFT)

Apply Mode
Offline

Official Website

Rally important Dates
09 December 2018 to 12 December 2

Offline Application & Official Notification Links
 Official Website Career Page
Official Notification PDF 

BEL Chennai Recruitment 2018 (16 Contract Engineer Posts)

தொடர்புடைய படம்

Organization Name
Bharat Electronics Limited 

Job Category 
Central Govt Jobs 

No. of Posts 
16 Vacancies 

Name of Posts 
Contract Engineer Posts 

Qualification
B.E./B.TECH

Job Location 
Chennai (Tamil Nadu) 

Selection 
Written Exam, Interview 

Apply Mode 
Online 

Website 

Starting Date 
22.11.2018 

Last Date 
12.12.2018 

Online Application & Official Notification Links
BEL Official Website Career Page
BEL Official Notification PDF 
BEL Online Application Form 

TN Labour Department Recruitment 2018 (21 Office Assistant Posts)

Tamilnadu Labour Department க்கான பட முடிவு

Organization Name
Tamilnadu Labour Department
Job Category
Tamilnadu Govt Jobs
No. of Posts
21 Vacancies
 Name of Posts
Office Assistant & Various Posts
Job Location
Tamilnadu
Selection
Short Listing, Interview
Apply Mode
Offline
Website
Starting Date
14.11.2018
Last Date
17.12.2018


Offline Application & Official Notification Links:
Website Page Click Here
Application Form Click Here